Tuesday, January 31, 2012

தரித்திர யோகம்

ராஜ யோகம் கஜகேசரி யோகம் பர்வதயோகம் என்று பலவிதமான யோகங்கள் இருப்பதாக ஜோதிடர்கள் சொல்கிறார்கள் அவர்களே தரித்திர யோகம் என்று ஒரு யோகம் இருப்பதாகவும் சொல்கிறார்கள் தரித்திர யோகம் என்றால் ரித்திரம் என்ற வார்த்தையை கேட்டவுடன் அது முழுமையான வறுமையை குறிக்கும் சொல் என்று நமக்கு தெரியும் மனிதனாக பிறந்தவன் எவனுமே தரித்திரத்தை விரும்பமாட்டான் காரணம் பசியோடும் பட்டினியோடும் வாழுகின்ற வாழ்க்கை யாருக்கும் பிடிப்பதில்லை ஒரு முழ கோவணத்துக்கு கூட வழி இல்லாதவன் தரித்திரன் என்று நாம் நினைக்கிறோம் ஆனால் ஜோதிட சாஸ்திரம் தரித்திரத்தை அந்த நோக்கில் பார்க்கவில்லை 

பொதுவாக ஜென்ம லக்கினம் மகரம் அல்லது கும்பமாக இருந்து அதில் சந்திரன் இருந்தால் அதற்கு பதினோராம் இடத்தில் குரு நின்றால் அந்த ஜாதகம் தரித்திர யோகா ஜாதகம் என்றும் கடக லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு பதினோராம் இடத்தில் குருவும் லக்கினத்திலேயே சனி இருந்தாலும் அதுவும் தரித்திர யோக ஜாதகம் என்று அழைக்கப்படுகிறது 

இப்படி பட்ட ஜாதக அமைப்புகளை எனது அனுபவத்தில் பலருக்கு இருக்க பார்த்திருக்கிறேன் அனால் அவர்களில் யாரும் வறுமை பிடியில் இருக்க வில்லை மாறாக நல்ல வசதிகளோடு இருப்பவர்களாகவும் இருக்கிறார்கள் உதாரணமாக நாற்பது ஏக்கர் நிலமும் பருத்தி வியாபாரமும் செய்கின்ற ஒருவரின் ஜாதகத்தில் இந்த தரித்திர யோகம் இருப்பதை கண்டு வியந்து இருக்கிறேன் 

இதன் அடிப்படையில் தரித்திர யோகம் என்று ஜாதக நூல்கள் சொல்வதற்கும் வறுமைக்கும் சம்மந்தம் இல்லை என்ற முடிவுக்கு நான் வந்த போது வேறொரு உண்மை தெளிவாக தெரிந்து என்னை வியப்பில் ஆழ்த்தியது 

நான் பார்த்த தரித்திர யோக ஜாதகர்கள் அனைவரும் ஒரு பொதுவான குணாம்சத்தில் இருப்பதை என்னால் அறிய முடிந்தது அதாவது தன்னிடம் எவ்வளவு சொத்து பத்துக்கள் இருந்தாலும் அவற்றால் அவர்கள் திருப்தி அடையவில்லை தன்னிடம் இருப்பது போதாது இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்ற ஆசை நிரம்பியவர்களாக அவர்களை கண்டிருக்கிறேன் எவ்வளவு இருந்தாலும் அவ்வளவும் போதாது மேலும் வேண்டும் என்று ஆசைபடுபவன் ஒருநாளும் சந்தோசமாக வாழமாட்டான் உண்மையில் அவன்தான் தரித்திரன் ஆவான் இந்த உண்மையை தான் ஜோதிட நூல்கள் தரித்திர யோகம் என்ற பெயரில் அழைப்பதை புரிந்து கொண்டேன் 

இது தவிர கேமுத்திர யோகம் என்று ஒரு யோகம் இருக்கிறது அது சந்திரனுக்கு இரண்டு மற்றும் பன்னிரெண்டில் நற்கோள்கள் இல்லாமல் இருக்க அல்லது கேந்திரம் அமர்ந்த சந்திரனுக்கு இருபுறமும் உள்ள கிரகங்கள் நட்புடன் அமையாது இருக்க உள்ள ஜாதகத்தை கேமுத்திர யோக ஜாதகம் என்று சொல்கிறார்கள் 

இந்த கேமுத்திர யோகம் பொருந்திய ஜாதகர்கள் பிச்சைகாரர்களாக இருப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது இது உண்மையா பொய்யா என்பதை நான் இன்னும் தெளிவாக அறிந்து கொள்ள முடியவில்லை காரணாம் இதுவரை நான் எந்த பிச்சைகாரரின் ஜாதகத்தையும் பார்த்தது கிடையாது அப்படி பார்த்த பிறகு தான் இதை பற்றி தெளிவான முடிவுக்கு வர இயலும் ஆனாலும் இந்த கேமுத்திர யோக ஜாதக அமைப்பு பல தேசாந்திரி சன்னியாசிகளிடம் இருப்பதை பார்த்திருக்கிறேன்.

Monday, January 9, 2012

சாத்துக்குடி பழத்தின் மருத்துவ குணங்கள்!!

சாத்துக்குடி பழத்தின் மருத்துவ குணங்கள்!!


மனித உடலுக்கு நேரடியாக சத்துக்ளை கொடுப்பது பழங்கள் மட்டுமே. பழங்கள் எளிதில் சீரணமாவதற்கும், வாய், வயிறு, குடல் பகுதியில் உள்ள புண்களை ஆற்றுவதற்கும் ஏற்றவை.

உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து அதாவது புரதச்சத்து, வைட்டமின் சத்துக்கள், கால்சியம் சத்து, நார்ச்சத்து என அனைத்து சத்துக்களும் பழங்களில் அதிகம் அடங்கியிருக்கின்றது. தினமும் பழங்கள் சாப்பிடுவது நல்லது. அந்தந்த சீதோஷ்ண காலங்களில் அதிகம் விளையும் பழங்களைச் சாப்பிட்டால் நல்லது.

மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் இருக்கும் சாத்துக்குடி பழம் நாரத்தை, ஆரஞ்சு வகையைச் சார்ந்தது. தினமும் இரண்டு பழங்கள் சாப்பிடுவது நல்லது.

நோயுற்றவர்களுக்கு: நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொடுக்கும். சாத்துகுடியானது இரத்தத்தில் எளிதில் கலப்பதால் உடல் வெகு விரைவில் தேறும்.

ஒவ்வொருவருடைய வளர்ச்சிக்கும் அவர்களுடைய நினைவாற்றலே முக்கிய பங்கு வகிக்கிறது. மறதி என்பது ஒருகொடிய நோய்க்கு ஒப்பாகும். எனவே நினைவாற்றலை அதிகரிக்க சாத்துக்குடி பழம் சாப்பிடுவது நல்லது.

இரத்த விருத்திக்கு: சிலர் எப்போதும் சோர்வாகவே இருப்பார்கள். சிறிது வேலை செய்தாலும், அதிகமாக அசதி உண்டாவதாகக் கூறுவார்கள். கை, கால் மூட்டுக்களில் வலி உண்டாகும். சில சமயங்களில் தலைச் சுற்றலுடன் இலேசான மயக்கம் ஏற்படும்.

இவர்களுக்கு தினமும் இரண்டு சாத்துக்குடி வீதம் சாறு எடுத்துக் கொடுத்து வந்தால் இரத்தம் விருத்தியாகும். உடல் அசதி நீங்கும்.

இரத்தத்தில் சிவப்பணுக்களின்(ஹீமோகுளோபின்) எண்ணிக்கை குறைவதால் இரத்தச் சோகை ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த இரத்தச் சோகையை விரட்டியடிக்க சாத்துக்குடி நல்ல மருந்தாகும்.

எலும்புகள் வலுவடைய: சிலருக்கு இலேசாக அடிபட்டால் கூட எலும்புகள் உடைந்துவிடும். மேலும் எலும்புகள் வலுவற்று காணப்படும். இதற்குக் காரணம் கால்சியச் சத்து குறைபாடே ஆகும். இவர்கள் சாத்துக்குடி கிடைக்கும் காலங்களில் அதிக அளவு சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுவடையும்.

நன்கு பசியைத் தூண்ட: பசியில்லாமல் சிலர் அவதியுறுவார்கள். இவர்களின் வயிறு எப்போதும் நிரம்பி உள்ளது போல் தோன்றும். சாத்துக்குடி பழத்தை தினமும் உண்டு வந்தால் சீரண சக்தியைத் தூண்டி நன்கு பசியை உண்டாக்கும்.

குழந்தைகளுக்கு: ஒரு வயதுக்குமேல் உள்ள குழந்தைகளுக்கு கால்சியச் சத்து அதிகம் தேவை. குழந்தைகளின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது இந்த கால்சியம் சத்து தான். சாத்துக்குடியில் அதிகளவு கால்சியச் சத்து இருப்பதால் குழந்தைகளுக்கு சாத்துக்குடி சாறு கொடுப்பது மிகவும் நல்லது.

முதியோர்களுக்கு: வயது முதிர்ந்தவர்களுக்கு உணவு சரியாக செரிக்காமல் மலச்சிக்கல் உண்டாகும். இதனால் உடல் அசதி, சோர்வு உண்டாகும். இவை நீங்க சாத்துக்குடி நல்ல மருந்தாகும். கிடைக்கும் காலங்களில் இந்தப் பழத்தை அதிகம் சாப்பிட்டு நோயின்றி வாழலாம்.

கணவனை இழந்தவள் கெட்ட சகுனமா...?

குனங்களை பற்றி மிக தவறுதலான புரிந்துணர்வே நம் மக்கள் மத்தியில் நிலவுகிறது அதற்கு காரணம் சில சகுனங்கள் நன்மை என்றும் சில சகுனங்கள் தீமை என்றும் சொல்லப்படுகிறதே தவிர எதற்காக அது நன்மை எதற்காக அது தீமை தருகிறது என்று காரண காரிய விளக்கங்கள் எதுவும் சொல்லப்படுவது இல்லை

மனிதனுடைய அறிவு ஒரு செயலை செய்யாதே என்று தடை வருகின்ற போது அதை ஏன் செய்ய கூடாது என்று கேள்வி கேட்கும் அதாவது சித்திரை மாதத்தில் அக்னி நட்சத்திர வேளையில் கிணறு வெட்டக்கூடாது என்று சொன்னால் ஏன் வெட்டக்கூடாது வெட்டினால் என்ன என்ற கேள்வியை அறிவு கேட்கும் அப்படி கேட்பதை யாரும் தவறு என்றோ அதிக பிரசங்கி தனம் என்றோ சொல்ல முடியாது

சித்திரை மாதத்தில் வெயில் அதிகமாக இருக்கும் ஈரப்பதம் இல்லாமல் மண் இறுகி போய்விடும் நிலத்தடி நீர் மிகவும் கீழே இறங்கி விடும் அதனால் அந்த நேரத்தில் கிணறு தோண்டப்படும் போது மிகவும் கடினமான வேலையாகவும் இருக்கும் நீர் ஊற்று கிடைக்காமலும் போய்விடும் என்று விளக்கம் சொல்ல வேண்டியது சித்திரை மாதத்தில் கிணறு தோண்ட கூடாது என்று சாஸ்திர வகுத்தவர்களின் கடைமையாகும்

நமது இந்திய சாஸ்திரங்கள் அனைத்துமே அனுபவங்களையும் விஞ்ஞான உண்மைகளையும் அடிப்படையாக கொண்டவைகள் ஆகும் உதாரணமாக மாலை நேரத்தில் வீடு வாசல் பெருக்கி தெளித்து எல்லாபுறத்து கதவுகளையும் திறந்து வைக்க வேண்டுமென்று சாஸ்திரம் சொல்கிறது அப்படி வைத்தால் மாகலக்ஷ்மியானவள் வீட்டுக்கு வருகை தருவாள் வீட்டை வறுமை அணுகாமல் பாதுகாப்பாள் என்றும் சொல்லப்படுகிறது இதன் உண்மை என்ன ?

மாலை நேர காற்று தெற்கு பக்கமாக இருந்து வீசும் தெற்கு திசையில் இருந்து வருகின்ற காற்று என்பதனால் தான் அது தென்றல் காற்று என்று அழைக்கப்படுகிறது அந்த தென்றல் காற்று வீட்டு முன்புறமாகவோ பின்புறமாகவோ அல்லது வேறு எந்த வழியாகவோ வீட்டிற்குள் வரவேண்டும் தென்றல் வீட்டுக்குள் வருவதனால் காலையில் இருந்து மாலை வரை உருவான வெப்பக்காற்று வெளியேறும் ஒரு புத்துணர்ச்சியான இனிய சூழ்நிலை வீட்டிற்குள் நிலவும் அப்போது அங்கே வசிக்கும் மனிதர்களின் மனமும் உடலும் புத்துணர்ச்சி பெரும் நற்காரியங்களை சிந்திக்கும் நற்க்காரியங்க்களை செயல்படுத்தும் நல்லதை மட்டுமே ஒரு மனிதன் செய்யும் போது அவனிடம் மகாலட்சுமி வராமல் வேறு எங்கு போவாள் !

ஆனால் இப்படி சில நடைமுறைகளுக்கு விளக்கம் சொன்ன நமது சாஸ்திர வல்லுனர்கள் சகுன சாஸ்திரத்திற்கு சரியான விளக்கங்கள் சொல்லாமல் போனது நமது துரதிஸ்டமே ஆகும் வல்லுனர்கள் சொல்லவில்லையே தவிர சகுன சாஸ்திரத்தில் பல இடங்களில் இலைமறை காயாக காரண காரியங்களை விளக்கி இருக்கிறார்கள்

உதாரணமாக கணவனை இழந்த மாது எதிரே வந்தால் நாம் போகும் காரியம் வெற்றி பெறாது என்று சகுன சாஸ்திரம் சொல்கிறது இதனுடைய உள்ளர்த்தம் என்வென்று தெரியாத சிலர் உடும்பு பிடியாக அதை பிடித்து கொண்டு எதிரே வருகின்ற விதவை பெண்ணை மனம் போன போக்கில் ஏசியும் பேசியும் விடுகிறார்கள் இதை சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் சில பகுத்தறிவு மாக புத்திசாலிகள் இந்து மத சம்பிரதாயங்கள் அனைத்துமே மனிதாபிமானம் அற்றவைகள் என்று பிரச்சாரம் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள்

உண்மையில் சகுன சாஸ்திரம் விதைகள் எதிர்படுவது கெடுதிஎன்று சொல்லவேண்டிய அவசியம் என்ன என்று யாரும் யோசிப்பது இல்லை அதை நம்புவர்கள் கூட அதற்கு சரியான விளக்கங்களை தருவது கிடையாது காரணம் அப்படி ஒரு விளக்கம் இருப்பதே அவர்களுக்கு தெரியாது

ஒரு பெண் கணவனை இழக்கிறாள் என்றால் அவள் ஜாதகத்தில் ராகு அல்லது கேது மிக பாதகமான நிலையில் இருக்க வேண்டும் அப்படி இருந்தால் மட்டும் தான் அவள் கணவனை இழந்து வாழும் பரிதாப நிலை ஏற்படும் ராகு கேதுக்கள் பாதகமான நிலையில் யார் ஜாதகத்தில் இருக்கிறதோ அவர்களிடம் இருந்து அந்த கிரகத்தின் தீய கதிர்வீச்சு வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும் அப்படி வெளிப்படும் நுண்ணிய அதிர்வலைகள் எதிர்படுகின்ற மனிதர்களின் புருவ மத்தி வழியாக உட்புகுந்து மூளையில் தாமச அதிர்வலைகளை அதாவது மந்தமான மன நிலையை ஏற்படுத்தும் மனமது செம்மை இல்லாத போது செய்யப்படுகின்ற காரியங்கள் எதுவும் சரிபட்டு வராது என்பதை சொல்லித்தெரிய வேண்டிய அவசியம் இல்லை

அதே போல வேலையாக போகும் போது எறுமை மாடு எதிர்பட கூடாது என்று சொல்வார்கள் இது எறுமை எமனுடைய வாகனம் என்பதற்காக சொல்லப்பட்டது அல்ல எறுமை என்பது மந்தமான இயல்புடையது சனிகிரகத்தின் முழுமையான ஆளுகைக்கு உட்பட்டது அதனால் தான் சனிக்கு மந்தன் என்று ஒரு பெயரே வைக்கப்பட்டுள்ளது எறுமையிடம் இருந்து மிக சுலபமாக மனிதர்களை சனியின் தன்மை தொற்றிக்கொள்ளும் இந்த விதி எறுமையை எதோ ஒரு சமயத்தில் எதிர் கொள்பவர்க்கு பொருந்துமே தவிர எறுமையோடு வாழ்க்கை நடத்துபவர்களுக்கு பொருந்தாது என்பதையும் மனதில் வைக்க வேண்டும்

இப்படி ஒவ்வவொரு சமுகத்திலும் ஏராளமான நுணுக்கங்கள் நிறைந்த காரணங்கள் உண்டு அவைகளை தேடிப்பார்த்து சேகரித்து கொண்டால் எதிர்க்கால தலைமுறையினற்கு பயனுடையதாக இருக்கும் நமது இந்திய் பொக்கிஷங்கள் மறைந்து போகாமலும் இருக்கும்.

Thursday, January 5, 2012

இடதுகண் துடித்தால் ஆண்களுக்கு கேடு என்பது ஏன்?

இடதுகண் துடித்தால் பெண்களுக்கு லாபம், ஆண்களுக்கு கேடு என்பதை ராமாயணம் தெளிவாகக் காட்டுகிறது. ராமனும், சுக்ரீவனும் நட்பு கொண்டனர். அவர்கள் நட்பு கொண்டதற்கு அடையாளமாக கையைப் பிடித்தபடியே, புதுமணத் தம்பதிகள் போல அக்னியை வலம் வந்தனர். ""ராமா! நாம் நண்பர்களாகி விட்டோம். இனிமேல், சுகமோ கஷ்டமோ நம் இரண்டு பேருக்கும் உரியது, என்றான் சுக்ரீவன். ராமனும் அந்த வார்த்தைகளை அங்கீகரித்தார். அந்த சமயத்தில், எங்கோ இருந்த மூவருக்கு இடதுகண் துடித்தது. ஒன்று அசோகவனத்தில் இருந்த சீதை. பெண்களுக்கு இடதுகண் துடித்தால் நன்மை ஏற்படும். சீதையின் விடுதலைக்கான நேரம் அப்போதே குறிக்கப்பட்டு விட்டது. வாலி மற்றும் ராவணனுக்கும் இடது கண்கள் துடித்தன. ஆண்களுக்கு இது கெடுபலனை உண்டாக்கும். அவர்களின் அழிவுக்கான நேரமும் அப்போதே உருவாகி விட்டது. பெண்களுக்கு எந்த ஆண் துரோகம் இழைக்கிறானோ, அவனுக்கு இடதுகண் துடித்தால், அவனது முடிவுகாலம் நெருங்கி விட்டது என்று அர்த்தம்.

Wednesday, January 4, 2012

சீரகத்தின் பயன்

திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு, மேலும் இரத்த அழுத்தம் அதிகரிக்காது தடுக்கும். சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.  அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்ப நிலை மனநோய் குணமாகும். சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்துத் தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு சிட்டிகை வீதம், தினம் இரண்டுவேளையாக சாப்பிட்டால், உடல் அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும்.

* சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும். சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும். சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய்ய அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் கோளாறுகள் குணமாகும்.

* ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் நோய்க்கு, சிறிது சீரகத்துடன் சின்ன வெங்காயம் வைத்து மைய்ய அரைத்து, பசும்பாலில் கலந்து குடித்து வர, நல்ல பலன் கிடக்கும். சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.   திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு, மேலும் இரத்த அழுத்தம் அதிகரிக்காது தடுக்கும்.

* சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும். அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்ப நிலை மனநோய் குணமாகும். சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்துத் தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு சிட்டிகை வீதம், தினம் இரண்டுவேளையாக சாப்பிட்டால், உடல் அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும்.

Tuesday, January 3, 2012

கடனில் இருந்த விலகுவதற்குச் ரகசிய வழிகள்



 
னியும், செவ்வாயும் எந்த ஜாதகத்தில் சேர்ந்து இருக்கிறதோ அந்த ஜாதகத்திற்கு உரியவர்கள் மாதம் மாதம் கடன் சுமையை ஏற்றிக் கொண்டே இருப்பார்களே தவிர குறைக்க மாட்டார்கள்.  அது மட்டுமல்ல சனிக்கு 1, 2, 5, 7, 9, 11, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தாலும் சனிக்கு 1, 2, 5, 9 ஆகிய இடங்களில் கேது இருந்தாலும் கடன் தொல்லை ஏற்படும்.

    இத்தகைய கடன் தொல்லையில் இருந்த விலகுவதற்குச் சுலபமான ரகசிய வழிகள் சில உள்ளன.  அவை இதுவரை பல காரணங்களுக்காக மறைக்கப்பட்டு வந்தாலும் பொதுநலம் கருதி வெளிப்படுத்துவது நல்லது என்று கருதுகிறேன்.

    அஸ்வினி நட்சத்திர நாளில் மேஷ லக்னம் வரும் வேளையிலோ, அனுஷ நட்சத்திரம் வரும் நாளில் விருச்சிக லக்னம் வரும் வேளையிலோ (பொதுவாக இதை மைத்ர முகூர்த்தம் என்று சொல்வார்கள்)  யாரிடம் அதிகமாகக் கடன் பட்டிருக்கிறோமோ அவர்களுக்கு அந்த நேரத்தில் சிறிய தொகையையாவது திருப்பிக் கொடுக்க வேண்டும்.

 அப்படிக் கொடுக்கும் பட்சத்தில் கடன் சிறுது சிறிதாக குறைந்து முற்றிலும் இல்லாது போய்விடும்  இந்த லக்ன கணக்குத் தெரியாதவர்கள் நவமி திதி, வரும் செவ்வாய் கிழமையிலோ சதுர்த்தி திதி வரும் ஞாயிறு (அ) சனிக்கிழமையிலோ தினசரி காலண்டல் போட்டிருக்கும் குளிகை நேரத்தில் மேலே சொன்னது போல கடனைத் திருப்பிக் கொடுக்கலாம்.  இதுவும் கணிக்கத் தெயாதவர்கள் செவ்வாய்கிழமை செவ்வாய் ஹோரையில் அப்படிச செய்தால் நிச்சயமாக கடன் சுமை தீரும்