Thursday, February 9, 2012

பேய்களுக்கு கால்கள் உண்டா?

சித்தர்கள் தத்துவப் படி மனித உடல் என்பது அன்னமயகோசம்,பிராணமயகோசம்,ஞானமய கோசம்,என்று மூன்று வகைப்படும்

  கண்ணுக்கு தெரியும் ஸ்தூல சரீரம் அன்னமயமானது  அதாவது சதை,எலும்பு,ரத்தம் சம்பந்தப் பட்டது

பிராணமயமென்றால் சூட்சம். கண்ணுக்கு தெரியாத உயிர் சம்பந்தப் பட்டது

ஞானமயமென்றால் எண்ணங்கள் கர்மாக்கள் சம்பந்தப் பட்டது இதுவும் கண்ணுக்கு தெரியாத சரீரமாகும்

உயிர் பிரிந்த பிறகு அன்னமய கோசம் அழிந்து விடுவிறது மற்ற இரண்டும் தான் ஒன்றோடு ஒன்று பிரியாமல் பித்துரு லோகத்தில் வாசம் செய்கிறது

இதையே ஆவி என்றும் பேய் என்றும் அழைக்கிறார்கள்

ஆவி வடிவம் என்றாலே அது நகர்ந்து செல்ல உறுப்புகளை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை

அவர்கள் நினைத்தப் படி நினைத்த இடத்திற்கு நிமிட நேரத்தில் நகர்ந்தே செல்லலாம் அதாவது காற்று போல

அதனால் ஆவிகள் தாங்கள் நடமாட கால்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை

ஆனாலும் பலர் நினைக்கிறப் படி ஆவிகளுக்கு கால்கள் இல்லாமலில்லை கால்கள் உண்டு

தான் வாழ்ந்த போது பெற்றிருந்த சரீரத்தின் சாயலிலேயே பல ஆவிகள் நடமாடுவதாக அமானுஷ்ய ஆய்வுகள் சொல்கின்றன

எனவே பேய்களுக்கு கால் உண்டு

பேய்களை நம்பாதவர்களுக்கு இந்த கேள்வியும் பதிலும் வேடிக்கையாக தோன்றும்

நாம் அதைப் பற்றி அக்கறை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை

சர்க்கரை நோயாளி புண் ஆற "புது நானோ பார்முலா'

திருப்புவனம்:சர்க்கரை நோயாளிக்கு புண் வந்தால் எளிதில் ஆறாது. எளிதாக புண் ஆற, திருப்புவனம் பட்டதாரி "புது நானோ பார்முலா' கண்டுபிடித்துள்ளார்.

சர்க்கரை நோயாளிகளுக்கு புண் எளிதில் ஆறாது. இதற்கு திருப்புவனம் பட்டதாரி நேசமணி, "புது நானோ பார்முலா' உருவாக்கியுள்ளார்.மதுரை யாதவா கல்லூரியில் "மைக்ரோ பயாலஜி' முடித்துள்ளார்.

நேசமணி கூறுகையில், ""ஒரு வகை தாவர இலையை எடுத்து அதில் நுண்ணுயிரியை (மைக்ரோ ஆர்கனிஸம்) பயன்படுத்தி, இரண்டு நாள் வைத்தால், அதில் இருந்து குறிப்பிட்ட நொதிகள் (என்சைம்ஸ்) உற்பத்தி ஆகும். இந்த நொதிகளுடன் ஒருவகை நானோ கெமிக்கலை சேர்த்து மருந்து தயாரிக்க முடியும். இந்த மருந்தை பயன்படுத்துவதால் சர்க்கரை நோயாளி புண்களில் உள்ள ரத்த நாளங்கள் வேலை செய்து புண்களை அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தலாம். இந்த பார்முலாவை பயன்படுத்தி பிளாஸ்டர் பேண்டேஜ் தயார் செய்யலாம். சென்னை ஐ.ஐ.டி.,யில் சமர்ப்பித்து புதிய கண்டுபிடிப்பாளர் என்று சான்றிதழ் பெற்றுள்ளேன்,'' என்றார்.

இவரை 82201 30443, 86818 35517 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இ-மெயில்: Hitechplasterbandage@gmail.com.

Tuesday, February 7, 2012

இருதார ஜாதகம் எப்படி இருக்கும் ?

அகத்தியர் மற்றும் புலிபாணி சித்தரின் ஜோதிட நெறிப்படி ஒன்றிற்கு மேற்பட்ட பெண் கிரகங்கள் குருவை பார்த்தால் இருதார அமைப்பு வரும் என்று சொல்லப்படுகிறது அதன் படி குரு இருக்கும் ராசிக்கு ஒன்று ஐந்து ஒன்பது மூன்று ஏழு பதினென்று இரண்டு பனிரெண்டு ஆகிய இடங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்கிரகங்கள் இருக்க வேண்டும் சந்திரன் சுக்கிரன் புதன் ஆகிய கிரகங்கள் பெண் கிரகங்கள் என்று அழைக்கப்படுகிறது இந்த மாதிரி இடங்களில்; சந்திரன் இருந்தால் இரண்டாவது மனைவி வயதில் மூத்தவலாகவும் சுக்கிரன் இருந்தால் சமவயது பெண்ணாகவும் புதன் இருந்தால் மிகவும் இளவயது பெண்ணாகவும் அமையுமென்று பராசர முனிவரின் ஜாதக சூத்தகம் சொல்கிறது

நெற்றியில் குங்குமம் வைப்பது எதற்காக?

ங்கையர்கள் திலகம் வைத்து கொள்வது மங்களத்தின் அடையாளமாக கருதப்படுகிறது ஆனால் திலகமிடுவது மங்கள குறியீடு மட்டுமல்ல அதனுள் வேறு சில அர்த்தங்களும் பொதிந்துள்ளது

மனிதனது மூளையின் மையப்புள்ளி இரண்டு புருவங்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது இதன் வழியாக பிரபஞ்ச ஈர்ப்பு விசையும் வேறு மனிதர்களின் என்ன பதிவுகளும் நேரடியாக மூளையில் பதிந்து அதற்கான அதிர்வுகளை உருவாக்குகிறது அந்த அதிர்வுகள் நல்லதாக இருக்கும் பட்சத்தில் சிக்கல்கள் இல்லை வேறுமாதிரியாக அமைந்தால் பிரச்சனை தான் 

வேறு மாதிரியான அதாவது எதிர்மறையான பதிவுகள் மூளையை அண்டாமல் புருவங்களுக்கு மத்தியில் வைக்கப்படும் திலகமோ விபூதி மற்றும் சந்தனமோ தடுத்துவிடுகிறது இதனால் நமது மூளையானது எப்போதும் எதிர்மறை சக்திகளால் தாக்கப்படுவது தவிர்க்க பட்டு விடுகிறது எனவே தான் நமது முன்னோர்கள் வெறும் நெற்றியோடு யாரும் இருக்க கூடாது என்று சொன்னார்கள்.