| மாங்கல்ய பாக்கியம் தரும் காரடையான் நோன்பு இன்று! சுமங்கலி பெண்கள், மாங்கல்ய பாக்கியத்திற்கும், கன்னியர்கள் சிறப்பான வாழ்க்கைத் துணை அமையவும், வரம் கோரி மகாலட்சுமியை நோக்கி வேண்டும் காரடையான் நோன்பு இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. பங்குனியை புருஷனாகவும், மாசியை பெண்ணாகவும் கொண்டு, இரண்டும் கூடும் காலத்தில், மகாலட்சுமியை நோக்கி நோன்பு இருப்பது காரடையான் நோன்பு. நோன்பின்போது பெண்கள் செய்யும் பிரார்த்தனை இதுதான், *உருகாத வெண்ணெய்யும், ஓரடையும் நான் செய்தேன் ஒருகாலும் என் கணவர் என்னை விட்டு பிரியாத வரம் வேண்டும். மகாலட்சுமியை நோக்கி இந்த பிரார்த்தனை நடத்தப்படுவது வழக்கத்தில் உள்ளது. இளம்பெண்கள் சிறப்பான வாழ்க்கைத் துணை வேண்டும் எனவும், நோன்பு இருக்கின்றனர். காரடையான் நோன்பை மகாலட்சுமியே இருந்ததாக ஐதீகம். காரடையான் நோன்பு நன்நாளில்தான், சாவித்திரி, கணவனின் உயிரை எமனிடமிருந்து மீட்டதாக நம்பிக்கை உள்ளது. அவரின் கணவர், மாமியார், மாமனாருக்கு உரிய கடமையைச் செய்பவர்களும், பிறந்த வீட்டிற்கு பெருமையைப் பெற்றுத்தருபவர்களும் பதிவிரதையாகின்றனர். அவர்களுக்கு மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும் என்பதை உணர்த்துகிறது இந்தநாள். மாமியாருக்கு சேவை செய்யும் மருமகள்களுக்கான விரதம் மட்டும்மல்ல, மருமகளை தங்கள் மகளாக எண்ண வேண்டும் என்று மாமியாருக்கும் உணர்த்துகிறது இந்த விரதம். *கார்காலத்தில் (முதல்போகம்), விளையும் நெல்லை குத்தி, மாவாக்கி அதில் வெல்லம் அல்லது காரம், தட்டாம்பயிறு (காராமணி) சேர்த்து, காரடை தயார் செய்யப்படுகிறது. இந்த நைவேத்தியத்தின் பெயரால் அனுஷ்டிக்கும் விரதமே காரடையான் நோன்பு எனவும் அழைக்கப்படுகிறது. பெண்கள் தனது கணவர் அல்லது பெரியவர்கள் கையால் சரடு (நோன்பு கயிறு) பெற்று கட்டிக்கொள்வார்கள். இன்று காரடையான் நோன்பு அனுஷ்டிக்கப்படுகிறது. இன்று காலை 9.25 மணி முதல் 9.45 மணிவரை நோன்பு அனுஷ்டிக்கலாம். விரதமுறை: விரதம் இருக்கும் நாளில் பெண்கள் அதிகாலையில் நீராடி, பூஜையறையை சுத்தம் செய்ய வேண்டும். ஒரு கலசத்தின் மேல் தேங்காய், மாவிலை வைக்க வேண்டும். கலசத்திற்கு சந்தனம், குங்குமம், மஞ்சள் பூசி, அதன் மேல் மஞ்சள் கயிறை கட்ட வேண்டும். அருகில் இஷ்ட அம்பாள் படம் வைத்து, அவளை காமாட்சியாக அல்லது சாவித்திரியாகக் கருதி வழிபட வேண்டும். அம்மனுக்கு கார் அரிசியும் காராமணியும் கலந்து செய்த அடையும், உருகாத வெண்ணெயும் நிவேதனம் செய்வார்கள். நோன்புச் சரட்டில் மலரைக் கட்டி பூஜையில் வைத்து கழுத்தில் கட்டிக் கொள்வார்கள். மாசிக்கயிறு பாசி படியும் என்று, பங்குனி முதல் நாளில் புதிய மங்கலச் சரடை மாற்றிக் கொள்வது விசேஷமானதாகக் கருதப்படுகிறது. பலன்: காரடையான் விரதம் இருக்கும் பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருப்பர். |
Wednesday, March 14, 2012
மாங்கல்ய பாக்கியம் தரும் காரடையான் நோன்பு இன்று!
Thursday, February 9, 2012
பேய்களுக்கு கால்கள் உண்டா?
சித்தர்கள் தத்துவப் படி மனித உடல் என்பது அன்னமயகோசம்,பிராணமயகோசம்,ஞானமய கோசம்,என்று மூன்று வகைப்படும்
கண்ணுக்கு தெரியும் ஸ்தூல சரீரம் அன்னமயமானது அதாவது சதை,எலும்பு,ரத்தம் சம்பந்தப் பட்டது
பிராணமயமென்றால் சூட்சம். கண்ணுக்கு தெரியாத உயிர் சம்பந்தப் பட்டது
ஞானமயமென்றால் எண்ணங்கள் கர்மாக்கள் சம்பந்தப் பட்டது இதுவும் கண்ணுக்கு தெரியாத சரீரமாகும்
உயிர் பிரிந்த பிறகு அன்னமய கோசம் அழிந்து விடுவிறது மற்ற இரண்டும் தான் ஒன்றோடு ஒன்று பிரியாமல் பித்துரு லோகத்தில் வாசம் செய்கிறது
இதையே ஆவி என்றும் பேய் என்றும் அழைக்கிறார்கள்
ஆவி வடிவம் என்றாலே அது நகர்ந்து செல்ல உறுப்புகளை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை
அவர்கள் நினைத்தப் படி நினைத்த இடத்திற்கு நிமிட நேரத்தில் நகர்ந்தே செல்லலாம் அதாவது காற்று போல
அதனால் ஆவிகள் தாங்கள் நடமாட கால்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை
ஆனாலும் பலர் நினைக்கிறப் படி ஆவிகளுக்கு கால்கள் இல்லாமலில்லை கால்கள் உண்டு
தான் வாழ்ந்த போது பெற்றிருந்த சரீரத்தின் சாயலிலேயே பல ஆவிகள் நடமாடுவதாக அமானுஷ்ய ஆய்வுகள் சொல்கின்றன
எனவே பேய்களுக்கு கால் உண்டு
பேய்களை நம்பாதவர்களுக்கு இந்த கேள்வியும் பதிலும் வேடிக்கையாக தோன்றும்
நாம் அதைப் பற்றி அக்கறை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை
சர்க்கரை நோயாளி புண் ஆற "புது நானோ பார்முலா'
திருப்புவனம்:சர்க்கரை நோயாளிக்கு புண் வந்தால் எளிதில் ஆறாது. எளிதாக புண் ஆற, திருப்புவனம் பட்டதாரி "புது நானோ பார்முலா' கண்டுபிடித்துள்ளார்.
சர்க்கரை நோயாளிகளுக்கு புண் எளிதில் ஆறாது. இதற்கு திருப்புவனம் பட்டதாரி நேசமணி, "புது நானோ பார்முலா' உருவாக்கியுள்ளார்.மதுரை யாதவா கல்லூரியில் "மைக்ரோ பயாலஜி' முடித்துள்ளார்.
நேசமணி கூறுகையில், ""ஒரு வகை தாவர இலையை எடுத்து அதில் நுண்ணுயிரியை (மைக்ரோ ஆர்கனிஸம்) பயன்படுத்தி, இரண்டு நாள் வைத்தால், அதில் இருந்து குறிப்பிட்ட நொதிகள் (என்சைம்ஸ்) உற்பத்தி ஆகும். இந்த நொதிகளுடன் ஒருவகை நானோ கெமிக்கலை சேர்த்து மருந்து தயாரிக்க முடியும். இந்த மருந்தை பயன்படுத்துவதால் சர்க்கரை நோயாளி புண்களில் உள்ள ரத்த நாளங்கள் வேலை செய்து புண்களை அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தலாம். இந்த பார்முலாவை பயன்படுத்தி பிளாஸ்டர் பேண்டேஜ் தயார் செய்யலாம். சென்னை ஐ.ஐ.டி.,யில் சமர்ப்பித்து புதிய கண்டுபிடிப்பாளர் என்று சான்றிதழ் பெற்றுள்ளேன்,'' என்றார்.
இவரை 82201 30443, 86818 35517 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இ-மெயில்: Hitechplasterbandage@gmail.com.

Tuesday, February 7, 2012
இருதார ஜாதகம் எப்படி இருக்கும் ?
அகத்தியர் மற்றும் புலிபாணி சித்தரின் ஜோதிட நெறிப்படி ஒன்றிற்கு மேற்பட்ட பெண் கிரகங்கள் குருவை பார்த்தால் இருதார அமைப்பு வரும் என்று சொல்லப்படுகிறது அதன் படி குரு இருக்கும் ராசிக்கு ஒன்று ஐந்து ஒன்பது மூன்று ஏழு பதினென்று இரண்டு பனிரெண்டு ஆகிய இடங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்கிரகங்கள் இருக்க வேண்டும் சந்திரன் சுக்கிரன் புதன் ஆகிய கிரகங்கள் பெண் கிரகங்கள் என்று அழைக்கப்படுகிறது இந்த மாதிரி இடங்களில்; சந்திரன் இருந்தால் இரண்டாவது மனைவி வயதில் மூத்தவலாகவும் சுக்கிரன் இருந்தால் சமவயது பெண்ணாகவும் புதன் இருந்தால் மிகவும் இளவயது பெண்ணாகவும் அமையுமென்று பராசர முனிவரின் ஜாதக சூத்தகம் சொல்கிறது
நெற்றியில் குங்குமம் வைப்பது எதற்காக?
மங்கையர்கள் திலகம் வைத்து கொள்வது மங்களத்தின் அடையாளமாக கருதப்படுகிறது ஆனால் திலகமிடுவது மங்கள குறியீடு மட்டுமல்ல அதனுள் வேறு சில அர்த்தங்களும் பொதிந்துள்ளது
மனிதனது மூளையின் மையப்புள்ளி இரண்டு புருவங்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது இதன் வழியாக பிரபஞ்ச ஈர்ப்பு விசையும் வேறு மனிதர்களின் என்ன பதிவுகளும் நேரடியாக மூளையில் பதிந்து அதற்கான அதிர்வுகளை உருவாக்குகிறது அந்த அதிர்வுகள் நல்லதாக இருக்கும் பட்சத்தில் சிக்கல்கள் இல்லை வேறுமாதிரியாக அமைந்தால் பிரச்சனை தான்
வேறு மாதிரியான அதாவது எதிர்மறையான பதிவுகள் மூளையை அண்டாமல் புருவங்களுக்கு மத்தியில் வைக்கப்படும் திலகமோ விபூதி மற்றும் சந்தனமோ தடுத்துவிடுகிறது இதனால் நமது மூளையானது எப்போதும் எதிர்மறை சக்திகளால் தாக்கப்படுவது தவிர்க்க பட்டு விடுகிறது எனவே தான் நமது முன்னோர்கள் வெறும் நெற்றியோடு யாரும் இருக்க கூடாது என்று சொன்னார்கள்.

Subscribe to:
Posts (Atom)