Sunday, March 26, 2023

கவிதையாய் நான் நினைக்கும் என் உணர்வுகள்

 நீ கொடுத்த வலிகள்- பசுமையான பனை ஓலையில் ஆணியால் எழுதப்பட்ட ஆனந்த உணர்வுகள் அழுகையுடன் ஆயிரம் இரவுகளில். இறுதியில் இறுக்கமான மனிதனாய் நான் .

Tuesday, February 18, 2014

வியாஷ் சரண்ஜித் ராஜ் 2ம் ஆண்டு பிறந்தநாள் 8-11-2013 - ஆந்திரா பிரதேசம் மாநிலம்

எங்கள் மகன் வியாஷ் சரண்ஜித் ராஜ் யின் இரண்டாம் ஆண்டு பிறந்த நாளுக்கு (8-11-2013) நாங்கள் சென்ற இடம் ஆந்திரா மாநிலத்தில் உள்ள பத்ராசலம், பர்ணசால மற்றும் பாப்பிகொண்டலு என்ற இடங்களுக்கு சென்றோம். அப்போது நான் ஹைதராபாத்தில் உள்ள IGATE கம்பெனியில் வேலை செய்துகொண்டிருதேன். இந்த இடங்கள் ஹைதராபாத்தில் இருந்து சுமார் 350 கி.மீ. தொலைவில் உள்ளன. பத்ராசலம் என்ற இடத்தில சீதாராமர் கோயில் இந்தியாவின் இரண்டாவது பெரிய புண்ணிய நதியான கோதாவரி நதியின் கரையில் உள்ளது. இந்த கோயில் கி. பி. 1674 ம் ஆண்டு கஞ்சர்ல கோபண்ணா ( பக்த ராமதாஸ்) என்பவரால் அன்று ஆண்ட சுல்தான் அரசாங்கத்து பணத்தை கொண்டு கட்டப்பட்டது. இதனால் அவர் சிறை வாசம் சென்றார். அந்த பணத்தை ராமர் அதிசயத்தால் திரும்ப செலுத்தி அவரை மீட்டார் என்பது புராணம். பின்னர் அவர் ராமர் மீது கொண்ட பற்றால் பல ராம கீர்த்தனைகள் எழுதினார். இந்த கோயிலின் உள்ளே பின்புறம் ஒரு பாறையை சுற்றி ஸ்ரீ ராமதாசுவின் கோயில் உள்ளது. அவர் ஸ்ரீ ராமா ஸ்ரீ ராமா என்றவாறு தியானத்தில் ஆழ்ந்தவாறு பாறையாக மாறினார் என்பது அங்குள்ளவர்கள் கூறுபவை. இவ்வாறு இந்த கோயிலுக்கு பல சிறப்புகள் சொல்லபடுகிறது. இந்த ஊரில் அபய ஆஞ்சநேய கோயில் ஒன்றும் உள்ளது.

                நான், என் மனைவி மற்றும் என் மகன் மூவரும் 06-11-2013 அன்று இரவு 9.30 மணிக்கு நிசாம்பெட் கிராஸ் ரோட்ஸ், ஹைதராபாத்தில் இருந்து பேருந்து மூலமாக பத்ராசலம் புறப்பட்டு 07-11-2013 விடியற் காலை 5.30 மணிக்கு சென்றடைதோம். இந்த நாள் (07-11-2007 ) எனது தாத்தா ராஜா கோபால் நாயுடுவின் 6ம் ஆண்டு நினைவுதினம். இதை நினைவு படுத்த வேண்டும், என் மனைவி கருதெரித்த செய்தி கேட்ட முதல் நாளே நான் என் மனைவியிடம், என் தாத்தாதான் எனக்கு மகனாக பிறக்க போகிறார் என்று கூறினேன். அவளோ முட்டாள் தனமாக பேசவேண்டாம் என்றாள். அதே போல் அவன் 7 அல்லது 8 ம் தேதிதான் பிறப்பான் என்றும் கூறினேன். ஆனால் அவள் 21-11-2011 ம் தேதியை doctor's expected date of delivery என்று காட்டினாள். நான் அனைவரிடமும் மேற்கண்டது போல் சொல்ல ஆரம்பித்தேன். அனைவரும் 15 நாட்கள் முன்பே பிறக்க வாய்ப்பில்லை என்றனர். ஆனால் நான் எதிர் பார்த்ததே நடந்தது. இதனால் அவன் பெயர் ராஜ் என முடியவேண்டும் என் முடிவு செய்தேன். அது மட்டும் இல்லாமல் அவன் பெயர் "வி" என்ற எழுத்தில் தான் தொடங்கவேண்டும் என்று பிறப்பதற்கு முன்பே முடிவுசெய்தேன்.

              பெயரின் காரணம்:
வியாஷ் ---விஜய் அஸ்வினி மற்றும் (வியாசர் - முற்றும் அறிந்த மாமுனிவர், மகாபாரதத்தில் பாண்டவர் மற்றும் கௌரவர்களின் தாத்தா).
சரண்ஜித் -- அவனது ராசி படி அவனது பெயரில் "cha" உச்சரிப்பு இருக்க வேண்டும். சரண்ஜித் என்றால் "கடவுளை வென்றவன்" என்று பொருள்.
ராஜ் --- எனது தாத்தா "ராஜா கோபால் நாயுடு".


               பாத்ராச்சலத்தில் கோயில் அருகே ஒரு விடுதியில் தங்கி குளித்து புறப்பட தயார் ஆனோம். ஆனால் அன்று கோயிலுக்கு செல்ல விரும்பவில்லை. அடுத்த நாள் என்மகனின் பிறந்த நாள் தான் அந்த கோயிலுக்கு செல்லவேண்டும் என நினைத்தோம். எனவே அங்கிருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் பாப்பிகொண்டலு பகுதிக்கு tata ace share auto வில் காலை 8.30 மணிக்கு புறப்பட்டோம். அது அனைவரையும் ஏற்றிக்கொண்டு 9.30 மணிக்கு பாத்ராச்சலத்தில் இருந்து புறப்பட்டது. இந்த இடத்தை அடைய அடர்த்தியான காட்டுக்குள்ளே சென்றடைய வேண்டும். சுமார் 11 மணிக்கு பாப்பிகொண்டலு படகு சவாரி ஆரம்பிக்கும் இடத்தை அடைந்தோம்.

              பாபிகொண்டலு என்பது பசுமையான பெரிய பல மலைகளுக்கு இடையே புண்ணிய நீண்ட ஆளமான நதியான கோதாவரி செல்லும் அழகை கண்டு ரசிக்க உகந்த இடம். இங்கு சுமார் 30 கி.மீ. சுற்றளவில் cell phone signal கூட கிடைக்காது. சுமார் 11.30 மணியளவில் எங்கள் படகு சவாரி தொடங்கியது. இந்த படகில்  2 அடுக்குகள் உள்ளன. முதல் அடுக்கின் பின்புறம் சமையல் கூடம் இருந்தது. காலை மற்றும் மதிய உணவு தயார் ஆகிக்கொண்டு இருந்தது. சுமார் 70 பேர் இருந்தனர். சுடச்சுட காலை சிற்றுண்டி அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட்டது. சாதரணமாக நதியின் ஆளம் கரை மட்டத்தில் இருந்து உள்ளே செல்ல செல்ல அதிகரிக்கும். ஆனால் இந்த கோதாவரி நதி கரை மட்டத்தில் இருந்தே மிகவும் ஆளமானது. எவ்வளவு ஆளமானது என்று அங்குள்ளவர்களுக்கே தெரியாது. நீரின் வேகமும் அதிகமாகதான் இருக்கும். ஆனால் பார்பதற்கு அமைதியாகவே இருக்கும். இதில் விழுந்தால் நன்கு நீச்சல் பயிற்சி பெற்றவர்கள் கூட தப்பிக்க முடியாது என்று சொல்கிறார்கள்.

            பாப்பிகொண்டலுவின் அழகை ரசித்தவாறு பயணித்தோம். இந்த பயணத்தில் கரையோரங்களில் உள்ள கிராமங்களை பற்றியும் அதன் சிறப்பு மற்றும் வரலாறு குறித்து ஒலி பெருக்கியில் அறிவித்துகொண்டே பயணம் தொடரும். அங்குள்ள அணைத்து கிராமங்களிலும் மின் இணைப்பு இல்லை, சாலைகள் இல்லை, மருத்துவ வசதி இல்லை. சிலர் சூரிய ஒளியின் மூலம் வரும் மின்சாரத்தை பயன்படுத்துகின்றனர்.  அங்கு படகு போக்குவரத்தே பிரதானமானது.  பிறகு ஒரு கரையோரம் நிறுத்தபட்டது. அங்கு ஒரு சிவன் கோயில் உள்ளது. சீதை ஒரு சிவா பக்தை என்பதற்கு எடுத்துகாட்டு. இந்த கோயில் நிர்வாகம் செய்வது மங்கைகள் என்று அழைக்கப்படும் திருமணமாகத பெண்கள். இந்த கோயிலை சுற்றி நீர் ஓடைகள் இருக்கும். வருடந்தோறும் வற்றாத ஓடைகள் ஆகும். மூங்கில்களால் ஆன பொம்மைகள் இங்கு சிறப்பு.

            மறுபடியும் பயணம் தொடரும். சுமார் மதியம் 2 மணியளவில், மதிய உணவிற்காக தீவு போன்ற இடத்தில நிறுத்தப்படும். இங்கு நதியானது இரண்டாக பிரியும் இடம். சூடான மதிய உணவு பரிமாறப்படும். கரையில் அமர்ந்து உண்ணும் போது நான் மேற்கூறிய நதியின் ஆளத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம். அவசரப்பட்டு நீரியில் இறங்கினால் மூழ்கி விடுவீர்கள். விரும்பினால் இந்த இடத்தில 24 மணிநேரம் தங்குவதற்கு தலா ஒருவருக்கு 1000 ரூபாய் படகுகாரர்களால் வசுலிக்கபடும். மறுநாள் வந்து உங்களை அழைத்து செல்வர். இங்கு மூங்கில் குடில்கள் தங்குவதற்கும், அசைவ உணவுகளும் கிடைக்கும். மறுபடியம் பாபிகொண்டலுவின் அழகை ரசித்தவாறு பயணம் தொடரும். இறுதியாக தொடங்கிய இடத்தை மாலை 6 மணிக்கு வந்தடையும். பின்னர் விடுதியை அடைந்து ஒய்வு எடுத்துக்கொண்டோம்.

         பிறந்த நாள் அன்று முதலில் ஸ்ரீ  சீதா இராமர் கோயிலுக்கு சென்றோம். பிறகு லக்ஷ்மி நரசிம்மர் கோயிலுக்கு சென்றோம். பிறகு  நதிக்கரைக்கு சென்றோம். பின்னர் அபஹய ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்றோம். பிறகு  சிற்றுண்டியை முடித்துவிட்டு ஆட்டோவில் "பர்ணசலா"  விற்கு புறப்பட்டோம். சுமார் 40 நிமிட பயணத்திற்கு பிறகு பர்ணசலவை அடைந்தோம். இதுவும் வேறு ஒரு திசையில் கோதாவரி நதி கரையில் அமைந்த இடம். இவைஅனைத்தும் பலமை காலங்களில் மனிதர்கள் ஆற்றங்கரையோரங்களில் வாழ்ந்தார்கள் என்பதை கூறுகிறது.

      பர்ணசாலாவின் சிறப்பு:
             இராமரும் சீதையும் வனவாசம் இருந்தநாட்களில்  வாழ்ந்தார்கள் என்பதற்கு இங்கு நிறைய சான்றுகள் சொல்லபடுகிறது. இங்கிருந்துதான் இராவணன் சீதையை கடத்தி சென்றான். சூர்பனகை மூக்கை அறுத்த இடமும் இங்குதான் உள்ளது. இந்த இடங்களை பார்த்துவிட்டு பத்ராசலம்  வந்து அடைந்தோம். பிறகு ஹைதராபாத் திரும்பினோம்.

இந்த பதிவு வெளியிடப்படும் நாளில் தான் ஆந்திராவில் இருந்து தெலங்கானா உதயமாவதர்கான மசோதா பார்லிமெண்டில் நிறைவேற்றபட்டது.

Monday, January 20, 2014

கார்ய சித்தியாக்கும் ஆஞ்சநேய ஸ்லோகங்கள்

ஸ்ரீ ஆஞ்சநேயர் துதி மற்றும் ஸ்தோத்திரங்களைக் பாராயணம் செய்து பலன் பெறவும்.


1) ஸர்வ கல்யாண தாதாரம் ஸர்வாபத் கன மாருதம்
அபார கருணாமூர்த்திம் ஆஞ்ஜநேயம் நமாம்யஹம்

2) அஞ்ஜநா நந்தனம் வீரம் ஜானகீ சோ’கநாசனம்
கபீச’மக்ஷ ஹந்தாரம் வந்தே லங்கா பயங்கரம்

3) ஆஞ்சநேயமதி பாடலாநநம் காஞ்சநாத்ரி கமநீய விக்ரஹம்
பாரிஜாத தருமூலவாஸிநம் பாவயாமி பவமான நந்தனம்

4) யத்ர யத்ர ரகு நாத கீர்த்தனம்
தத்ர தத்ர க்ருதமஸ்தகாஞ்ஜலிம்
பாஷ்பவாரி பரிபூர்ணலோசனம்
மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்

5) மனோஜவம் மாருத துல்ய வேகம்
ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்
வாதாத்மஜம் வானரயூத முக்யம்
ஸ்ரீ ராமதூதம் சி’ரஸா நமாமி

ப்ரார்த்தனா மந்த்ரம்
புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்ப்பயத்வம் அரோகதா
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத்

கார்ய சித்தி மந்த்ரம்
அஸாத்ய ஸாதக ஸ்வாமின் அஸாத்யம் தவ கிம்வத
ராம தூத க்ருபாஸிந்தோ மத் கார்யம் ஸாதயப்ரபோ

நமஸ்கார மந்த்ரம்
ராமதூத மஹாதீர ருத்ரவீர்ய ஸமுத்பவ
அஞ்ஜநாகர்ப்ப ஸம்பூத வாயுபுத்ர நமோஸ்து தே

ஸ்ரீ ஆஞ்சநேய மூல மந்த்ரம்
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஹனுமதே ராம தூதாய
லங்கா வித்வம்ஸனாய
அஞ்சனா கர்ப்ப ஸம்பூதாய
சாஹினி டாஹினி வித்வம்ஸனாய
கில கில பூ காரினே விபீஷணாய
ஹனுமத் தேவாய
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஹ்ராம் ஹ்ரீம் ஹூம் பட் ஸ்வாஹா!!

ஆஞ்சநேய பல ச்ருதி மந்த்ரம்
ஓம் நமோ பகவதே ஆஞ்சனேயாய மஹா பலாய ஸ்ரீ ஹனுமதே ஸ்வாஹா

ஆஞ்சநேயர் காயத்ரி
ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
வாயு புத்ராய தீமஹி
தந்நோ : ஹநுமத் ப்ரசோதயாத்!!
ஓம் தத் புருஷாய வித்மஹே
வாயு புத்ராய தீமஹி
தந்நோ மாருதி ப்ரசோதயாத்

ஸ்ரீ ஆஞ்சநேயர் துதி
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றாறாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்.

ஸ்ரீ ஹனுமத் கவசம்
அஸ்ய ஸ்ரீ ஹனுமத்கவச ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய

ஸ்ரீராமசந்த்ரருஷி:
காயத்ரீச்சந்த:
ஸ்ரீ ஹனுமான் பரமாத்மா தேவதா
மாருதாத்மஜ இதி பீஜம்
அஞ்ஜனாஸூனுரிதி ச’க்தி:
ஸ்ரீராமதூத இதி கீலகம்
மம மானஸாபீஷ்ட ஸித்யர்த்தே ஜபே வினியோக:

ஸ்ரீ ராமசந்த்ர உவாச :-
ஹனுமான் பூர்வத: பாது தக்ஷிணே பவனாத்மஜ:
ப்ரதீச்யாம் பாது ரக்ஷோக்ன: ஸௌம்யாம் ஸாகரதாரண:
ஊர்த்வம் மே கேஸரீ பாது விஷ்ணு பக்தஸ்துமேஹ்யத:
லங்காவிதாஹக: பாது ஸர்வாபத்ப்யோ நிரந்தரம்
ஸுக்ரீவ ஸ சிவ: பாது மஸ்தகே வாயுநந்தன:
பாலம் பாது மஹாவீர: ப்ருவோர்மத்யே நிரந்தரம்
நேத்ரே சாயாபஹாரீ ச பாது மாம் ப்லவகேச்’வர:
கபோலௌ கர்ணமூலே து பாது மே ராமகிங்கர:
நாஸாயாமஞ்ஜனாஸூனு: பாது வக்த்ரம் ஹரீச்’வர:
பாது கண்டம் ச தைத்யாரி: ஸ்கந்தௌ பாது ஸுரார்சித:
புஜௌ பாது மஹா தேஜா: கரௌ து சரணாயுத:
நகான் நகாயுத: பாது குக்ஷௌ பாது கபீச்’வர:
வக்ஷௌ முத்ராபஹாரீச பாது பார்ச்’வே மஹாபுஜ:
ஸீதா சோ’கப்ரஹர்தாச ஸ்தனௌ பாது நிரந்தரம்
லங்காபயங்கர: பாது ப்ருஷ்டதேசே’ நிரந்தரம்
நாபிம் ஸ்ரீராமசந்தரோ மே கடிம் பாது ஸமீரஜ:
குஹ்யம் பாது மஹாப்ராக்ஞ: ஸக்தினீ ச சி’வப்ரிய:
ஊரூ ச ஜானுனீ பாது லங்கா ப்ராஸாத பஞ்சன:
ஜங்கே பாது கபிச்’ரேஷ்ட: குல்பம் பாது மஹாபல:
அசலோத்தாரக: பாது பாதௌ பாஸ்கர ஸன்னிப:
அங்கான்யமிதஸத்வாட்ய: பாது பாதாங்குளீஸ்ஸதா
ஸர்வாங்காநி மஹா சூ’ர: பாது ரோமாணி சாத்மவான்
ஹனுமத் கவசம் யஸ்து படேத் வித்வான் விசக்ஷண:
ஸ ஏவ புருஷச்’ரேஷ்ட: புக்திம் முக்திஞ்ச விந்ததி
த்ரிகாலம் ஏககாலம் வா படேன் மாஸத்ரயம் நர:
ஸர்வான் ரிபூன் க்ஷணாஜ்ஜித்வா ஸ புமான் ச்’ரியம் ஆப்னுயாத்
அர்தராத்ரௌ ஜலேஸ்தித்வா ஸப்த வாரம் படேத்யதி
க்ஷயாபஸ்மார குஷ்டாதி தாபத்ரய நிவாரணம்
அச்’வத்தமூலே அர்கவாரே ஸ்தித்வா படதி ய:புமான்
அசலாம் ச்’ரியமாப்னோதி ஸங்க்ராமே விஜயீபவேத்
ஸர்வரோகா: க்ஷயம் யாந்தி ஸர்வஸித்திப்ரதாயகம்
ய: கரே தாரயேந்நித்யம் ராமரக்ஷா ஸமன்விதம்
ராமரக்ஷம் படேத்யஸ்து ஹனூமத் கவசம் வினா
அரண்யே ருதிதம் தேன ஸ்தோத்ரபாடஞ்ச நிஷ்பலம்
ஸர்வ து:க பயம் நாஸ்தி ஸர்வத்ர விஜயீ பவேத்
அஹோராத்ரம் படேத்யஸ்து சு’சி: ப்ரயதமானஸ:
முச்யதே நாத்ரஸந்தேஹ: காராக்ருஹகதோ நர:
பாபோபபாதகான் மர்த்ய: முச்யதே நாத்ரஸம்ச’ய:
அக்ஷக்னோ ஜிதராக்ஷஸேச்’வர மஹாதர்பாபஹாரீரணே
ஸோயம் வானரபுங்கவோ அவது ஸதா த்வஸ்மான் ஸமீராத்மஜ:
ஸ்ரீ ராம விரசித ஸ்ரீ ஆஞ்சநேய கவசம் ஸம்பூர்ணம்.
வைதேஹீ கன சோ’க தாபஹரணோ வைகுண்டபக்திப்ரிய:
அக்ஷக்னோ ஜிதராக்ஷஸேச்’வர மஹாதர்பாபஹாரீரணே
ஸோயம் வானரபுங்கவோ அவது ஸதா த்வஸ்மான் ஸமீராத்மஜ:
ஸ்ரீ ராம விரசித ஸ்ரீ ஆஞ்சநேய கவசம் ஸம்பூர்ணம்.

விளக்கேற்றும் முன் சொல்ல வேண்டியவை….

ஸுபம் கரோதி கல்யாணம் ஆரோக்யம் தநஸம்பத:


ஸத்ருபுத்திவிநாஸாய தீபஜ்யோதிர் நமோஸ்துதே

விளக்கொளி நற்பேற்றினையும் நன்மையையும் நோயற்ற நிலையையும் நிறைந்ந செல்வத்தையும் அளிக்கிறது. அறிவின் பகையை (அறியாமையை) அழிக்கும் உனக்கு எனது நமஸ்காரம்.

தீபமூலே ஸ்திதோ ப்ரஹ்மா தீபமத்யே ஜநார்தந:

தீபாக்ரே ஸங்கரே: ப்ரோக்த: ஸந்த்யாதீப நமோஸ்துதே

தீபத்தின் அடிப்பகுதியில் பிரம்மாவும், தீபத்தின் நடுப்பகுதியில் விஷ்ணுவும்ம, தீபத்தின் மேல் பகுதியில் சிவனும் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட ஸந்த்யா தீபமே உனக்கு நமஸ்காரம்.

செல்வ வளம் கொழிக்கும் லட்சுமி தேவி ஸ்லோகம்



நம் இல்லத்தில் லட்சுமி தேவியின் அனுக்கிரகம் பரிபூரணமாக கிடைத்தால்………செல்வநிலைக்கு பஞ்சம் ஏற்படாது. எனவே தினமும் லட்சுமி தேவியின் ஸ்லோகத்தை பாராயணம் செய்து வரலாம்

பொன்னரசி, நாரணனார் தேவி, புகழரசி

மின்னுநவ ரத்தினம்போல் மேனியழகுடையாள்

அன்னையவள் வையமெல்லாம் ஆதரிப்பாள் ஸ்ரீதேவி

தன்னிருபொற் றாளே சரண்புகுந்து வாழ்வோமே.

நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே

சங்கசக்ரகதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

எல்லா சக்திகளையும் உடையவளே! செல்வங்களின் இருப்பிடமே! தேவர்களால் வழிபடப்படுவளே! உனக்கு நமஸ்காரம். சங்கையும், சக்கரத்தையும், கதையையும் கையில் கொண்டவளே! மஹாலக்ஷ்மியே! உனக்கு நமஸ்காரம்.