நம் இல்லத்தில் லட்சுமி தேவியின் அனுக்கிரகம் பரிபூரணமாக கிடைத்தால்………செல்வநிலைக்கு பஞ்சம் ஏற்படாது. எனவே தினமும் லட்சுமி தேவியின் ஸ்லோகத்தை பாராயணம் செய்து வரலாம்
பொன்னரசி, நாரணனார் தேவி, புகழரசி
மின்னுநவ ரத்தினம்போல் மேனியழகுடையாள்
அன்னையவள் வையமெல்லாம் ஆதரிப்பாள் ஸ்ரீதேவி
தன்னிருபொற் றாளே சரண்புகுந்து வாழ்வோமே.
நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே
சங்கசக்ரகதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே
எல்லா சக்திகளையும் உடையவளே! செல்வங்களின் இருப்பிடமே! தேவர்களால் வழிபடப்படுவளே! உனக்கு நமஸ்காரம். சங்கையும், சக்கரத்தையும், கதையையும் கையில் கொண்டவளே! மஹாலக்ஷ்மியே! உனக்கு நமஸ்காரம்.
No comments:
Post a Comment