கொல்கத்தா : வரும் 10ம் தேதி ஏற்படும் முழு சந்திர கிரகணத்தை இந்தியாவில் நன்கு பார்க்க முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, எம்.பி.பிர்லா வானவியல் மைய இயக்குனர் டி.பி.துயாரி கூறிய விவரம்: இந்த ஆண்டில் 2வது முறையாக டிசம்பர் 10ம் தேதி முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
கடந்த முறை போல் இல்லாமல், இந்த முறை சந்திர கிரகணத்தை கொல்கத்தா உட்பட நாட்டின் பெரும்பகுதியில் பார்க்கும் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. 10ம் தேதி மாலை 6.15க்கு தொடங்கும் கிரகணம், இரவு 9.48 மணிக்கு நீங்கும்.
மேலும், முழு சந்திர கிரகணம் சரியாக 7.36க்கு தொடங்கி 8.28 மணி வரை 51 நிமிடம் நீடிக்கும். ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் கிரகணத்தை நன்கு பார்க்க முடியும். ஆனால், தென் அமெரிக்கா அல்லது அன்டார்டிகாவில் தெரியாது. ஐரோப்பா மற்றும் ஆப்ரிக்காவில் கிரகணத்தின் தொடக்கத்தை காண முடியாது.
இந்த ஆண்டின் ஜூன் 15ல் ஏற்பட்ட முதல் சந்திர கிரகணத்தை, மேக மூட்டம் காரணமாக இந்தியாவின் சில பகுதிகளில் பார்க்க முடியவில்லை. ஆனால், தற்போது 2வதாக ஏற்பட இருக்கும் கிரகணத்தை நன்கு பார்க்க முடியும் என நம்பலாம். மேலும், அடுத்து 7 ஆண்டுகள் கழித்து 2018ம் ஆண்டு ஜூலை 27ல் ஏற்படும் முழு சந்திர கிரகணத்தைதான் இந்தியாவில் பார்க்க முடியும். அதே ஆண்டு ஜனவரி 31ல் ஏற்படும் கிரகணத்தை பார்க்க முடியாது.
இவ்வாறு துயாரி தெரிவித்தார். பிலிப்பைன்சில் சூரியன் மறைந்து சற்று நேரத்தில் ஆசியா, ஆஸ்திரேலியாவில் தோன்றும் சந்திர கிரகணம், கிழக்கு ஐரோப்பாவுக்கு நேரே உதயமாகி வட அமெரிக்காவின் வட மேற்கிற்கு நேரே படும். பாதிக்கும் மேற்பட்ட நாடுகளில் இக்கிரகணத்தை பார்க்க முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment