Wednesday, September 21, 2011

ஆய்வில் ஒரு தகவல் 2 கப் காபி குடித்தால் பக்கவாதம் வராது

லண்டன் : தினமும் 2 கப் காபி குடிப்பதன் மூலம் பக்கவாத நோய் வருவதைத் தடுக்க முடியும் என ஒரு ஆராய்ச்சி முடிவு கூறுகிறது. ஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகரைச் சேர்ந்த கரோலின்ஸ்கா இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதுதொடர்பாக ஒரு ஆய்வு நடத்தினர். அதாவது 1960களுக்குப் பிறகு சுமார் 5 லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட 8 ஆய்வுகளை அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன் விவரம்:

பொதுவாக தினமும் 2 கப் காபி குடிப்பவர்களுக்கு பக்கவாத நோய் வருவதற்கான வாய்ப்பு 14 சதவீதம் குறைவு என ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுபோல் 3 அல்லது 4 கப் காபி குடிப்பதால் 17 சதவீதம் வரை ஆபத்து குறையும். அதேநேரம் 6 கப் அல்லது அதற்கு மேல் குடிப்பதன் மூலம் பக்கவாத நோய் வருவதற்கான வாய்ப்பு 7 சதவீதம் மட்டுமே குறையும் என்கிறது அந்த ஆய்வு.

காபியில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி பக்கவாத நோய் வருவதற்கான வாய்ப்பை குறைக்கிறது. குறிப்பாக கெட்ட கொழுப்பால் மூளை பாதிக்கப்படுவதை இது தடுக்கிறது. ஆனால் டீ குடிப்பதால் இந்த பலன் கிடைப்பதில்லை என ஆய்வில் தெரியவந்துள்ளது.

Friday, September 16, 2011

‘ஜிம்’ போகாமல் ‘ஜம்’மென இருக்க தினமும் சாக்லெட் சாப்பிடலாம்

டெட்ராய்ட் : உடலை கட்டுக்கோப்பாக பராமரிக்க தினமும் காலையில் ‘ஜிம்’ போய் உடற்பயிற்சி செய்வதற்கு சோம்பல் கொள்பவரா நீங்க...? இனி, ஒரு சாக்லெட் பார் சாப்பிட்டு விட்டு போர்வைக்குள் ஒளிந்து தூக்கத்தை தொடரலாம் என்கிறது அமெரிக்க ஆராய்ச்சி. அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலம் டெட்ராய்ட் நகரில் உள்ள வேய்ன் பல்கலைக்கழகம். அதன் ஆராய்ச்சி பேராசிரியர்கள் குழு, சாக்லெட் அளிக்கும் நன்மைகள் பற்றி தீவிர ஆய்வு நடத்தினர்.

உடற்பயிற்சிக்கும் சாக்லெட்டுக்குள் உள்ள தொடர்புகள் பற்றி ஆராய்ந்தனர். தீவிர உடற்பயிற்சி மற்றும் ஜாகிங் செய்யும்போது உடல் தசைகளை இறுகச் செய்யும் எபிகாடெக்கின் என்ற வேதிப்பொருள் சாக்லெட்டிலும் இருப்பது தெரிய வந்தது. உடற்பயிற்சி செய்வதால் தசைக்கு அளிக்கப்படும் ஊக்கம் போலவே சாக்லெட்டில் இருக்கும் எபிகாடெக்கின் செயல்படுவது உறுதியானது.

இதுபற்றி எலியிடம் நடத்திய ஆய்விலும் தசைக்கு ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் இந்த வேதிப்பொருள் சிறப்பாக செயல்படுவது தெரிந்தது. இதையடுத்து, தினமும் சாக்லெட் சாப்பிட்டால் கடின உடற்பயிற்சி செய்வதற்கு நிகரான பலனை பெற முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். இதுபற்றி ஆராய்ச்சி குழுவை சேர்ந்த டாக்டர் மோ மெலேக் கூறியதாக டெய்லி மெயில் நாளேடு வெளியிட்ட செய்தியில் கூறியதாவது:

ஓட்டம், சைக்கிள் ஓட்டுதல் ஆகியவற்றால் எபிகாடெக்கின் அதிகரித்து தசை செல்கள் ஊக்கம் பெறுகின்றன. அதே பயன் சாக்லெட்டில் உள்ள எபிகாடெக்கிலும் கிடைக்கிறது. குறிப்பாக, இதயம் மற்றும் எலும்புகளை சுற்றியுள்ள தசைகளில் இது சிறப்பாக செயல்படுகிறது. எனவே, உடற்பயிற்சியின் பயனை சாக்லெட் அளிக்கும். எலியிடம் நிரூபணமான இந்த ஆராய்ச்சி மனிதருக்கும் பொருந்தும் இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வு முடிவுகள் சைக்காலஜி என்ற இதழில் வெளியாகியுள்ளன.

மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் மாற்றம்

சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் இயங்கிவந்த சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் இன்று முதல் சென்னை அண்ணாசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது. கலெக்டர் லில்லி வெளியிட்ட அறிக்கை: பொதுமக்கள் எளிதாகவும் குறித்த நேரத்திலும் பாஸ்போர்ட் பெற சென்னையில் தாம்பரம், அமைந்தகரை மற்றும் சாலிகிராமம் ஆகிய மூன்று இடங்களில் பாஸ்போர்ட் சேவை கேந்திரங்கள் இன்று (16ம் தேதி) முதல் தொடங்கப்படவுள்ளது. சென்னை-6, நுங்கம்பாக்கம், சாஸ்திரிபவனில் இயங்கிவந்த சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் இன்று முதல் பழைய எண் 785, புதிய எண் 158, ரையலா டவர்ஸ், டவர்ஸ் 2,3 மற்றும் 4வது தளம், அண்ணாசாலை, சென்னை-2 என்ற முகவரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Wednesday, September 14, 2011

எம்எல்ஏக்கள், அமைச்சர்களுக்கு சம்பள உயர்வு

சென்னை, செப்.14: எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களுக்கு சம்பளம் மற்றும் படிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.இதுகுறித்து சட்டப் பேரவையில் முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு: உறுப்பினர்கள் சிலர் தங்களுக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் படிகளை அதிகரித்து வழங்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளார்கள். உறுப்பினர்களின் கோரிக்கையின் அடிப்படையில், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் தொகுதிப்படி 5,000 ரூபாயிலிருந்து  10,000 ரூபாயாக உயர்த்தப்படும்.  இதன் மூலம், சட்டமன்ற உறுப்பினர்களுக்கான மொத்த மாதச் சம்பளம் மற்றும் படிகள் 50,000 ரூபாயிலிருந்து 55,000 ரூபாயாக உயரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும், அமைச்சர்கள், பேரவைத் தலைவர், பேரவைத் துணைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர், அரசு தலைமை கொறடா ஆகியோருக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் தொகுதிப்படி 5,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக உயர்த்தப்படும். இதன் மூலம், அமைச்சர்கள் மற்றும் பேரவைத் தலைவருக்கான மொத்த மாதச் சம்பளம் மற்றும் படிகள் 27,000 ரூபாயிலிருந்து 32,000 ரூபாயாக உயரும் என்பதையும், பேரவைத் துணைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அரசு தலைமைக் கொறடா ஆகியோருக்கான மொத்த மாதச் சம்பளம் மற்றும் படிகள் 26,500 ரூபாயிலிருந்து 31,500 ரூபாயாக உயரும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த உயர்வின் மூலம் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 1 கோடியே 41 லட்சம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும்.இதே போன்று, சட்டமன்றப் பேரவை , மேலவை முன்னாள் உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் உயர்த்தப்பட வேண்டும் என்று சட்டமன்றப் பேரவை , மேலவை முன்னாள் உறுப்பினர்கள் நலச் சங்கத்திலிருந்து கோரிக்கைகள் வரப் பெற்றுள்ளன.  அவர்களது கோரிக்கையினையும் ஏற்று சட்டமன்றப் பேரவை, மேலவை உறுப்பினர்களுக்கான மாத ஓய்வூதியம் 10,000 ரூபாயிலிருந்து 12,000 ரூபாயாக உயர்த்தப்படும். இதன் மூலம் அரசுக்கு 2 கோடியே 40 லட்சம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். சட்டமன்றப் பேரவை, மேலவை முன்னாள் உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் 12,000 ரூபாயாக உயர்த்தப்படுவதை அடுத்து, மறைந்த சட்டமன்றப் பேரவை , மேலவை உறுப்பினர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படும் குடும்ப ஓய்வூதியம் 5,000 ரூபாயிலிருந்து 6,000 ரூபாயாக உயரும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதனால், அரசுக்கு ஆண்டொன்றுக்கு 47 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். மேற்படி உயர்வு 1.9.2011 முதல் வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்த உயர்வினால் ஆண்டு ஒன்றுக்கு கூடுதலாக 4 கோடியே 29 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும் என முதலவர் தனது அறிவிப்பில் குறிப்பிட்டார்.

நோய்களை விரட்டும் விளக்கு பூஜை

நமது இந்து மதத்தில் கடைபிடிக்கப் படும் சடங்குகளுக்கும் அதில் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கும் எதாவது ஒரு தத்துவம் பின்னணியாக இருக்கும் இந்த விளக்கேற்றும் சடங்குக்கு பின்னணி எது என்று மேலே பார்த்தோம் இந்த சடங்கில் பயன் படுத்தப் படும் குத்து விளக்கு என்ற பொருளுக்கும் ஆழ்ந்த கருத்தமைந்த பின்னணி உள்ளது குத்து விளக்கின் அடிப்பாகம் மலர்ந்த தாமரை பூவை போல அகன்று வட்டமாக இருப்பதனால் இது திருப்பாற் கடலில் பாம்பணை மேல் பள்ளிகொண்டுள்ள திருமாலின் திருநாபியில் முளைத்த தாமரை பூவில் அமர்ந்திருக்கும் படைப்பு கடவுளான பிரம்ம தேவனை குறிக்கிறது

அடிப்பாகத்தில் இருந்து மேல் நோக்கி வளருகின்ற தண்டு பாகம் ஓங்கி வளர்ந்து நிற்பதனால் ஈரடியால் பூமியையும் ஆகசத்தையும் அளந்த திருவிக்கிரமனான மகா விஷ்ணுவை குறிக்கிறது அதற்கு மேல் இருக்கின்ற அகல் விளக்கு பாகம் என்ற விளக்கின் மேல் பகுதி குழி விழுந்து எண்ணெயை உள் வாங்கி கொள்வதனால் கங்கையை தலைபாகத்தில் அடக்கிய மகேஸ்வரனை குறிப்பதாகும் மேல் பகுதியில் திரி ஏற்றுவதற்காக உள்ள ஐந்து முகங்களும் சிவ பெருமானையே அடையாளப் படுத்துவதாகும்


குத்து விளக்கின் மேல் பகுதியில் உள்ள காம்பு பகுதி கும்ப கலசம் போல இருக்கும் இது உருவமாகவும் அருவமாகவும் உள்ள சதாசிவ தத்துவத்தை குறிப்பதாகும் இந்த விளக்கில் இடுகின்ற எண்ணெய் அல்லது நெய் உலக முழுவதும் பரவியுள்ள நாத பிரம்மத்தை குறியீடாக காட்ட வல்லதாகும் வெள்ளை நிற பஞ்சு திரி அன்னை சரஸ்வதி தேவியையும் அதில் பிரகாசிக்கும் ஒளி ஞானத்தையும் சுடர் மகா லட்சுமியையும் அதன் சூடு ருத்திரனின் தேவியான பராசக்தியையும் குறிப்பதாகும்

இது தவிர விளக்கில் உள்ள கலை நயம் மிக்க சித்திர வேலைப்பாடுகள் கணபதி முருகன் ராமன் கிருஷ்ணன் போன்றோர்களை குறிப்பதாகும் சுருக்கமாக சொல்வது என்றால் காமதேனு என்ற பசுவின் உடலில் சகல தேவதைகளும் வசிப்பது போல திருவிளக்கான குத்து விளக்கிலும் சர்வ தேவர்களும் தேவதைகளும் காட்சி தந்து தத்துவ வடிவமாக குடி கொண்டிருக்கிறார்கள் என்றே சொல்லலாம் 

இந்து மதத்தோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்ட ஜோதிட சாஸ்திரத்தில் விளக்கேற்றி வழிப்படுவதால் பல தனி மனித பிரச்சனைகள் நீங்குவதாக சொல்லப் பட்டிருக்கிறது தீபம் ஏற்றுவதிலுள்ள மகத்துவத்தை ஆரம்ப காலத்தில் நான் உணராததால் எனக்கு அதில் அவ்வளவான நம்பிக்கை அப்போது இல்லை இருந்தாலும் எதையும் பரிசோதனை செய்து பார்க்காமல் தவறு என்று ஒதுக்கி விடுவதோ சரி என்று ஏற்று கொள்வதோ அறிவுக்கு பொருந்தி வரக்கூடிய சங்கதியாகாது

எனவே தீப பரிகாரத்தை பரிட்ச்சித்து பார்க்க விரும்பினேன் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர் ஒருவர் அடிக்கடி நோய்களால் துன்பப்பட்டு வந்தார் அவரை ஒரு மண்டல காலத்திற்கு வைத்திய நாதனான திரு முருகன் சன்னதியில் வேப்ப எண்ணெய் விட்டு விளக்கேற்ற சொன்னேன் அவரும் நான் சொன்னப்படி செய்தார் முடிவு எனக்கு பெரிய ஆச்சரியத்தை கொடுத்தது அடிக்கடி நோய்வாய் படும் அவர் சிறிது சிறிதாக அந்த தொல்லையிலிருந்து விடுபடலானார் இதன் மூலம் தீபம் ஏற்றுவதில் ஜோதிட சாஸ்திரம் சொல்வது மிக சரி என்று எனக்கு பட்டது 

 நமது ஜோதிட சாஸ்திரம் இல்லங்களில் தீபம் ஏற்றி வழிப்படுவதற்கு காலை நான்கு மணி முதல் ஆறு மணிவரை சிறந்த நேரம் என்கிறது இந்த நேரத்தில் தீபம் ஏற்றினால் குடும்பத்தில் சர்வ மங்களமும் ஏற்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது அதே போல மாலை ஆறு மணி முதல் ஏழு மணிக்குள் தீபம் ஏற்றினால் லஷ்மி கடாட்சம் உண்டாகும் என்றும் சொல்லப்பட்டுள்ளது இதை போலவே கிழக்கு திசையில் தீபம் ஏற்றினால் துன்பம் அகலும் வீட்டில் உள்ள பீடைகள் ஒழியும் என்றும் மேற்கு திசையில் தீபம் ஏற்றினால் கடன் தொல்லை மற்றும் சனி தோஷம் விலகும் என்றும் சாஸ்திரம் சொல்கிறது

செல்வம் பெருகுவதற்கும் குடும்பத்தில் உள்ள கன்னிப் பெண்கள் இளைஞர்கள் ஆகியோரின் திருமண தடைகள் விலகி சுபகாரியங்கள் நடப்பதற்கும் குழந்தைகள் நல்ல விதமாக கல்வியில் தேறி வெற்றி பெறுவதற்கும் வடக்கு முகமாக தீபம் ஏற்ற வேண்டும் என்றும் தெற்கு முகமாக ஏற்றினால் பாவம் ஏற்படும் மரணபயம் உண்டாகும் என்றும் சாஸ்திரம் சொல்கிறது


 திசையை மட்டும் சாஸ்திரம் தீர்மானிக்க வில்லை திபம் ஏற்றுவதற்கு பயன் படுத்தும் திரியில் கூட கிடைக்கும் பலாபலன்களை சாஸ்திரம் விவரிக்கிறது வெள்ளை நிற துணியை திரியாக போட்டால் கல்வி வளரும் என்றும் மஞ்சள் நிற துணியை திரியாக பயன் படுத்தினால் மங்களம் நிகழும் என்றும் வீட்டிற்குள் தீய சக்திகளின் நடமாட்டம் பேய் பிசாசுகளின் தொல்லை ஏவல் பில்லி சூனியத்தால் பாதிப்பு போன்றவைகள் அண்டாமல் இருக்க எருக்கம் பஞ்சு திரி உதவும் என்றும் பஞ்சு திரி சகல செளபாக்கியம் தரும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது மேலும் செம்மை நிற திரியால் செல்வம் பெருகும் வறுமை ஒழியும் என்றும் அறிவுறுத்தப் படுகிறது

இதே போல மகா லஷ்மியின் அனுக்கிரகம் பெறுவதற்கு நெய் தீபம் ஏற்றினால் சுகத்தோடு அருளும் கிடைக்கும் என்றும் நல்லெண்ணெய் கொண்டு தீபம் ஏற்றினால் பீடைகள் அகன்று ஸ்ரீ மத் நாராயணனின் அருள் கிடைக்கும் என்றும் இலுப்பை எண்ணெய் பயன் படுத்தினால் ருத்ராதி தேவதைகளின் அனுக்கிரகம் வாய்க்கும் என்றும் தேங்காய் எண்ணெய் தீபம் கணபதியின் அருளை பெற்று தரும் என்றும் வேப்ப எண்ணெய் தீபம் ஆரோக்கியம் தரும் என்றும் ஜோதிட சாஸ்திரத்தின் பரிகார நூல்கள் தெளிவாக சொல்கிறது

 தீபம் ஏற்ற பயன் படுத்தும் விளக்கின் வகையில் கூட பல பலன்கள் இருக்கின்றன மண்ணால் ஆன விளக்கில் தீபம் ஏற்றினால் பீடை விலகும் வெள்ளி விளக்கில் தீபம் ஏற்றினால் திருமகளின் அருள் கிடைக்கும் பஞ்சலோக விளக்கில் தீபம் ஏற்றினால் தேவதை வசியம் ஏற்படும் வெண்கல விளக்கில் தீபம் ஏற்றினால் ஆரோக்கியம் உண்டாகும் இரும்பு விளக்கில் தீபம் ஏற்றினால் சனிகிரக தோஷம் விலகும் என்றும்

 குத்து விளக்கில் உள்ள ஐந்து முகத்திலும் தீபம் ஏற்றினால் ஐஸ்வரியம் ஏற்படும் நான்கு முகத்தில் தீபம் ஏற்றினால் பசுக் கூட்டம் வளரும் மூன்று முகத்தில் தீபம் ஏற்றினால் புத்திர பாக்கியம் கிடைக்கும் இரண்டு முகத்தில் தீபம் ஏற்றினால் குடும்ப சச்சரவுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும் ஒரு முகத்தில் தீபம் ஏற்றினால் சமமான பலன் கிடைக்குமென்றும் சொல்லப்பட்டுள்ளது

பொதுவாக குத்து விளக்கில் ஐந்து முகங்கள் இருப்பதை நாம் சாதரணமாக பார்த்திருப்போம் இந்த ஐந்து முகமும் மனிதனுக்கு வேண்டிய ஐந்து விதமான பண்புகளை குறிக்கிறது அன்பு அறிவு உறுதி நிதானம் பொறுமை ஆகிய ஐந்து பண்புகளை மனிதன் பெற்றால் அவன் வாழும் மண்ணுலகிலும் வாழப்போகும் வின்னுலகிலும் நற்கதியை பெறுவான் என்பதே இதன் பொருளாகும்

பொதுவாக தீபம் பூஜை அறையில் மட்டும் தான் ஏற்றப் படுகிறது ஆனால் வீட்டின் நடு முற்றம் சமயலறை துளசி மாடம் போன்ற இடத்திலும் தீபங்களை ஏற்றலாம் மாலை நேரம் நடு முற்றத்தில் மாக்கோலம் போட்டு மஞ்சள் திரி வைத்து நெய் தீபம் ஏற்றினால் அந்த குடும்பம் வறுமையின் ஆழத்தில் கிடந்தாலும் மிக கண்டிப்பாக செல்வ செழிப்பின் உச்சத்திற்கு வருமென்று சாஸ்திரங்கள் உறுதியாக சொல்லுகின்றன இதில் எதையாவது ஒன்றை பரிசோதனைக்காகவாவது நீங்கள் செய்து பாருங்கள் சர்வ நிச்சயமாக நல்ல பலன் கிடைப்பதை கண்கூடாக காண்பீர்கள்.

Monday, September 12, 2011

நீங்களே ஹோமம் செய்யலாம்...!

மது ஜோதிட சாஸ்திரத்தில் நவக்கிரகங்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனி தானியங்களும் மலர்களும் சொல்லப்பட்டிருக்கிறது

சூரியனுக்குக் கோதுமையும், செந்தாமரை பூவும்; 

சந்திரனுக்கு நெல்லும், வெண் அல்லியும்,

செவ்வாய்க்கு துவரையும், செண்பகப்பூவும்,

புதனுக்கு பச்சைப் பயிறும், வெண்காந்தல் பூவும்,

குருவுக்கு கொண்டைக் கடலையும், முல்லைப் பூவும்,

சுக்கிரனுக்கு மொச்சைப் பயிறும், வெண்தாமரையும்,

சனிக்கு எள்ளும், கருங்குவளையும்,

ராகுவிற்கு உளுந்தும், மந்தாரையும்,

கேதுவிற்கு கொள்ளும், செவ்வல்லியும் என்று சாஸ்திரங்கள் வகைப்படுத்தி தருகின்றன .


நமது ஜாதகத்தில் எந்தக் கிரகத்தின் ஆகர்ஷணம் குறைவாக இருக்கிறதோ அந்தக் கிரகத்திற்குய தானியத்தை நெய்வேத்தியம் செய்து அதற்குரிய மலர்களால் பூஜை செய்து வழிபட்டால் நல்ல பலனைப் பெறலாம் என்றும் பொதுவாக சொல்லப்படுகிறது

ஆனால் இந்த தானியங்களையும் மலர்களையும் வேறொரு வழியிலும் பயன்படுத்தி குறிப்பிட்ட கிரகத்தின் நல்ல இயல்புகளை மனிதர்கள் பெறலாம்

உதாரணமாக ஒருவருக்கு குரு என்ற வியாழன் கிரகத்தின் நிலைப்பாடு ஜாதக ரீதியாக சரிவர அமைய வில்லை என்றால் அவர்கள் மா ஆல் அரசு ஆகிய மரங்களில் உள்ள சமித்துக்களில் ஹோம நெருப்பை வளர்த்து கொண்டை கடலையையும் உலர்ந்த முல்லை பூவையும் குரு அஷ்டோத்திர சத நாமாவளி சொல்லி ஆகுதியாக போட வேண்டும் 


 இப்படி மூன்று வியாழா கிழமை குரு ஓரையில் ஹோமம் செய்தால் குரு கிரகத்தின் முழு பலனையும் சம்பந்தப் பட்டவர்கள் அடையலாம்

இப்படியே ஒவ்வொரு கிரகத்திற்கும் அதற்குரிய நாளிலும் ஓரை நேரத்திலும் ஹோமம் செய்து பலனை அடையலாம்

இதற்கு சித்தர்கள் இன்னும் ரகசியமான வழிகளையும் சொல்கிறார்கள்

குறிப்பிட்ட தானியத்தை உணவில் அடிக்கடி சேர்த்து கொண்டாலும் மலர்களை உடலில் படும்படி அணிந்து கொண்டாலும் பலன் கிடைக்கும் என்கிறார்கள்

இப்படி செய்து பலன் பெற்ற பலரையும் நானறிவேன்

மேலும் இங்கே நான் சொன்ன ஹோமத்தை செய்ய தனியாக புரோகிதர்கள் தேவை இல்லை

சம்பந்தப் பட்டவர்களே தூய மனதோடு வீட்டிலேயே செய்யலாம்

நம்பிக்கையோடு செய்யுங்கள் நன்மை நிச்சயம் கிடைக்கும்

Tuesday, September 6, 2011

ஒரே நேரத்தில் பல சர்ச் எஞ்ஜினில் இருந்து முடிவுகளை பெறலாம்

இணையத்தில் தேட நாம் முதலில் நாடுவது கூகுள். இதனை விடவும் ஒரு விஷயத்தினை ஆழமாகத் தேட ஒரு தளம் உள்ளது. இந்தத் தளமானது கூகிள், யாஹூ, ஆஸ்க், விக்கிபீடியா, ஆன்சர்ஸ், யூடியூப், அமேசன் போன்ற அனைத்திலும் ஒரே இடத்தில் உடனடியாக தேட வழி செய்கிறது.இத்தளத்திற்கு சென்று தேடுதல் கட்டத்திற்குள் என்ன தேடவேண்டுமோ அதற்கான வார்த்தையைக் கொடுத்ததும் தானாகவே ஒவ்வொரு தேடு பொறியிலும் எந்த வார்த்தை அதிகமாக தேடப்பட்டிருக்கிறதோ அந்த வார்த்தைக்கான Suggestion Keyword-ஐ கொடுக்கப்பட்டிருக்கும்.  இதிலிருந்து நாம் எந்தத் தளத்தில் தேடவேண்டுமோ அந்தத் தளத்தை சொடுக்கி நாம் தேடியவற்றை விரிவாக பார்க்கலாம்.  இணையதள முகவரி: www.soovle.com

தொல்லை அழைப்புக்கு விடிவு

செல்போனில் தொல்லை அழைப்புகள், எஸ்எம்எஸ்களை சமாளிப்பதில் ஒரு வழியாக இந்த மாதம் 27ம் தேதி முதல் விடிவு காலம் பிறக்கிறது. ‘140’ என்று தொடங்கும் டெலிமார்க்கெட்டிங் அழைப்புகள், எஸ்எம்எஸ்களை அன்று முதல் அடையாளம் கண்டு தவிர்க்கலாம் என்று தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) அறிவித்துள்ளது. செல்போனில் டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்களின் தொல்லை அழைப்புகள், எஸ்எம்எஸ்களால் வாடிக்கையாளர்கள் அவதிப்படுகின்றனர்.

அவற்றை தடுக்க டிராய் இதுவரை எடுத்த நடவடிக்கைகளுக்கு வெற்றி கிடைக்கவில்லை. ஆனால், டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு ஒரே லேண்ட்லைன் நம்பரையும், செல்போனில் ‘140‘ என்று தொடங்கும் எண்ணையும் அது ஒதுக்கியுள்ளது. எனவே, அழைப்பு வரும்போது அந்த நம்பரை அடையாளம் கண்டு தொல்லை அழைப்பை தவிர்த்து நிம்மதி அடையலாம். இந்த எண்ணை நடைமுறைப்படுத்தும் நிர்வாக பணிகள் அனைத்தும் முடியும் தருவாயில் உள்ளன. எனவே, 27ம் தேதி முதல் இது அமலுக்கு வரும் என்று டிராய் தெரிவித்துள்ளது. செல்போன் வாடிக்கையாளர் எண்ணிக்கை நம்நாட்டில் 80 கோடியை தொட்டுள்ளது.

அதற்கேற்ப தொல்லை அழைப்புகளும் அதிகரித்து வருகின்றன. உறவினர்கள், நண்பர்கள், அலுவலக விஷயமாக பேசும் அழைப்புகளை விட நமக்கு தொடர்பில்லாத இந்த தொல்லை அழைப்புகளே தினசரி அதிகமாக இருக்கின்றன. இதுபற்றி தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ‘டிராய்‘க்கு புகார்கள் குவிந்தன. இதை தடுக்க போன் நிறுவனங்களுடன் டிராய் பலமுறை ஆலோசனை நடத்தியது. பல விதிமுறைகளை வெளியிட்டது.

‘அழைக்காதீர்‘ பதிவேடு ஏற்படுத்தியது. அதில் வாடிக்கையாளர்களை பதிவு செய்ய கேட்டுக் கொண்டது. ஆனால், பதிவு செய்த பிறகும் தொல்லை அழைப்புகள் அதிகமானதே தவிர குறையவில்லை.இதனால், மீண்டும் புகார்கள் குவிந்தன. இந்த பிரச்னையை தீர்ப்பது பற்றி கடந்த சில மாதங்களாக டிராய் தீவிர நடவடிக்கைகளில் இறங்கியது. அதன்படி, லேண்ட்லைன் போனில் டெலி மார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கென எளிதில் அடையாளம் காணக்கூடிய லேண்ட்லைன் எண்களை ஒதுக்குமாறு தொலைத் தொடர்பு துறையிடம் (டிஓடி) அது கேட்டுள்ளது.செல்போன்களில் டெலி மார்க்கெட்டிங் அழைப்புகள் அனைத்தும் ‘140‘ என்ற எண்ணுடன் தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒருவழியாக இது 27ம் தேதி முதல் அமலுக்கு வருவதால் செல்போன் வாடிக்கையாளர்கள் நிம்மதி அடையலாம்.

Monday, September 5, 2011

வீடு தேடி வருது உங்க தகுதிக்கு வேலை!

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மைல் நீள கியூவில் காத்திருந்து, முட்டிமோதி கல்விச் சான்றிதழை பதிவு செய்வதற்குள் போதும், போதும் என்றாகி விடும். அப்படியே பதிவு செய்தாலும், அரசு வேலை என்பது கோடியில் சிலருக்குதான் கிடைக்கும். அந்த காலம் எல்லாம் இப்ப மலையேறியாச்சு... பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு கூட வேலை, வீடு தேடி வரப் போகிறது.
இந்தாண்டு பிளஸ் 2, 10ம் வகுப்பு முடித்த மாணவர்கள் 11.81 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். அவர்களின் படிப்பு, திறமை ஆகியவற்றுடன் தயாரிக்கப்படும் டேட்டாபேஸ், அரசு துறைகள் மட்டுமில்லாமல் தனியார் நிறுவனங்களும் ஆன்லைனில் பார்க்கும்படியான வசதியை அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை, பள்ளி கல்வி துறையுடன் இணைந்து செயல்படுத்த உள்ளது. இதில், பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தியவர்களின் பட்டியலும் சேர்க்கப்பட உள்ளது. இதனால், தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான தகுதியுடன் உள்ள மாணவர்களை வேலைக்கு தேர்வு செய்ய முடியும்.  மாணவர்கள் விண்ணப்பிக்காமலேயே அவர்களுக்கு  வேலை கிடைக்கும் நிலை உருவாகும்.
படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்கும் திட்டக்குழுவின் இயக்குனர் மிஸ்ரா கூறுகையில், ‘இந்தாண்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்களின் பட்டியலை தனியார் நிறுவனங்களும் பார்க்கும் வசதி செயல்படுத்தப்பட உள்ளது. இது தொடர்பாக தனியார் நிறுவனங்களுடன் வேலைவாய்ப்பு மற்று பயிற்சி துறை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்Õ என்றார்.  அரசின் இந்த திட்டம் எதிர்கால இளைஞர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். மேலும், வேலை தேடி இளைஞர்கள் பல நிறுவனங்களின் படியேறிய காலம் மாறி, நிறுவனங்கள் திறமையான இளைஞர்களுக்கு வேலை தர போட்டி போடும் நிலை உருவாகும். வேலை உங்கள் வீடு தேடி வரும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை.

பயிற்சியும் உண்டு
‘இது ஒரு நல்ல முயற்சி. தனியார் நிறுவனங்களும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களின் பட்டியலை பார்க்கும் பட்சத்தில் அவர்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய முடியும். படிப்புடன் பயிற்சி பெற்றவர்களுக்கும், படித்து முடித்தவர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த டேட்டாபேசை தொழிற்பயிற்சி நிறுவனங்களும் பார்க்கும் வகையில் செயல்படுத்த வேண்டும். அப்போதுதான், படிப்பில் சுமாரான மாணவர்களுக்கும், பாதியில் படிப்பை நிறுத்தியவர்களுக்கும் தொழில்பயிற்சி அளித்து அவர்களுக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கி தர முடியும்Õ என தனியார் நிறுவன உரிமையாளர்களும், கல்லூரி நிர்வாகிகளும் கூறுகின்றனர்.

* ஸ்ரீ ஆஞ்சநேயரை பஞ்ச பூதங்களை வென்றவர் என்று சொல்வது ஏன்?

  • அவர் வாயுகுமாரன் என்பதனால் காற்றை வென்றவர் ஆனார்.
  • இராம நாம சக்தியால் சமுத்திரத்தை தாண்டியதனால் நீரை வென்றவர் ஆனார்.
  • பூமாதேவியான சீதாபிராட்டியின் பூரண அருளை பெற்றதனால் நிலத்தை வென்றவர் ஆனார்.
  • இலங்கையில் வாலில் வைத்த தீயால் இலங்காதகனம் செய்ததனால் நெருப்பை வென்றவர் ஆனார்.
  • வானத்தில் நீந்திடும் ஆற்றல் உடையவரானதால் ஆகாயத்தை வென்றவர் ஆனார்.

 இப்படி ஐம்பூதங்களையும் அடக்கிய ஆஞ்சநேயர் ராமா என்ற இரண்டு எழுத்தில் அடங்கி விடுகிறார்.  அந்த ராம நாமத்தை யார் முழுமனத்தோடு சொல்கிறார்களோ அவர்களுக்கும் ஆஞ்சநேயர் அடங்கி விடுகிறார்.

எந்தவொரு வீட்டிலும் அறுபது வருடங்களுக்கு மேல் புதியதாக மாற்றியமைக்காமல் வாழக் கூடாது

ல்ல முறையில் உறுதியாக உங்கள் வீடு அமைந்திருந்தால் அதை இடிக்க வேண்டிய அவசியம் இல்லை

ஆனாலும் வாஸ்து சாஸ்திரம் ஒரு வீட்டில் தெய்விக சக்திகள் அறுபது வருடங்கள் மட்டுமே தங்கும் என்றும் அதன் பிறகு புதியதாக அந்த சக்திகளை வீட்டிற்குள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென்று சொல்லுகின்றன

இப்படி சொல்வதை தான் சிலர் தவறாக அர்த்தப்படுத்திக் கொண்டு வயதான வீட்டை இடிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்

புதியதாக தெய்வ சக்திகளை வீட்டிற்கு கொண்டுவர வேண்டுமென்றால் அதற்கு இடித்தலை தவிர வேறு சில நல்ல வழிகளும் உள்ளன 
அதாவது சிறிய ஓட்டை உடைசல்களை சரி செய்து புதிய வர்ணம் தீட்டி நவக்கிரக ஹோமம் சுதர்சன ஹோமம் இவற்றுடன் வாஸ்து சாந்தி ஹோமம் போன்றவற்றை செய்ய வேண்டும்

மிக முக்கியமாக குலதேவதை இஷ்டதேவதை போன்றவைகள் வீட்டிற்குள் நிரந்தரமாக வாசம் செய்ய லஷ்மி நாராயண ஹோமம் செய்ய வேண்டும்

இப்படி செய்து வீட்டிற்குள்ளேயே அன்றைய தினத்தில் உறவினர் மற்றும் ஏழைகளுக்கு அறுசுவை விருந்து கொடுக்க வேண்டும்

இயன்ற வரையில் வஸ்திர தானம் செய்வது நல்லதாகும் இப்படி செய்தாலே போதுமானது

முப்பாட்டன் கட்டிய வீட்டில் சந்தோசமாக வாழலாம்