அறிவுரையல்ல! அனுபவம்!!
காலம்
வேகமாக போகிறதா மனிதன் வேகமாக போகிறானா என்பது பல நேரங்களில் புரிவதில்லை
தினசரி பல ஆண்களையும் பெண்களையும் சந்திக்கிறேன் படித்தவன் பாமரன் அறிவாளி
முட்டாள் நல்லவன் கெட்டவன் என்று அனைவருமே எதாவது ஒரு பிரச்சனையில்
சிக்கலில் இருப்பதாகவே சொல்கிறார்கள்
இந்த உலகில் யாருமே நிமதியாக இருபதாக தெரியவில்லை உண்மையில் மனிதனாகப் பிறந்தவன் எவனுக்குமே மனதில் சாந்தியும் சமாதானமும் ஏற்படவே ஏற்படாதா?
இந்த உலகில் யாருமே நிமதியாக இருபதாக தெரியவில்லை உண்மையில் மனிதனாகப் பிறந்தவன் எவனுக்குமே மனதில் சாந்தியும் சமாதானமும் ஏற்படவே ஏற்படாதா?
இதைப்படிக்கும் நீங்கள்
இப்படிக்கூட கேட்கலாம் நாங்கள் சமதானமாக இல்லை எழுதுகின்ற நீ மட்டுமாவது
சாந்தியோடு இருக்கிறாயா?என்று நிச்சயம் உண்மைய சொல்வதானால் நானும் சாதாரண
மனிதன் போலத்தான் இருக்கிறேன்
எதற்காக நாம் அனைவரும் திருப்தி இல்லாமல் வாழ்கிறோம் இப்படிப்பட்ட வாழ்வை நமக்குத் தந்தது கடவுளா? அல்லது நாமே தேர்ந்தெடுத்துக் கொண்ட செயற்கை துன்பமா?
இரண்டு இளம் சாதுக்கள் நதிக்கரையோரம் நடந்து போனார்கள் இருவருமே சிறந்த தபஸ்வி நல்ல ஞானம் நிறைந்த சுத்தாத்மாக்கள் மிகத்தீவிரமான பிரம்மச்சரிய விரதத்தை மேற்கொண்டவர்கள்

அருகிலுள்ள கிராமத்தில் சென்று ஸ்வாமி தரிசனம் செய்து வரத்தான் இருவரும் புறப்பட்டிருந்தனர் ஆற்றில் நல்ல வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது சுழித்து சுழித்து நுங்கும் நுரையுமாய் புது வெள்ளம் ஓடுகின்ற காட்சி அவர்களின் மனதில் சந்தோஷ பிரவாகத்தை அதிகரித்து கொடுத்தது
அந்த வேளையில் ஆற்று வெள்ளத்தில் ஒரு பெண் இழுத்துச் செல்லப்படுவதை கண்டனர் அதைப்பார்த்ததும் ஒரு சாது சட்டென்று ஆற்றில் குதித்து நீந்திச் சென்று அந்தப் பெண்ணை தோளில் தூக்கிவந்து கரையில் படுக்க வத்து முதலுதவி செய்து காப்பாற்றி விட்டு தனது துறவறத் தோழருடன் ஆலைய தரிசனத்திற்கு சென்று விட்டார்
இரண்டு நாட்களும் கடந்து விட்டது பெண்ணைக் காப்பாற்றியவர் உடன் வந்த சாது மிகவும் வருத்தத்துடன் காணப்பட்டார் கலகலப்பாக எதுவும் பேசவில்லை இவரின் இந்தநிலை அவருக்கு புரியவில்லை அதனால் ஏன் இப்படி சோர்வாகவும் கவலையாகவும் இருக்கிறீர்கள் உடல் நலத்தில் எதாவது குறையா? என்று கேட்டார்
அதற்கு இவர் உடலுக்கெல்லாம்
ஒன்றும் குறைவில்லை மனதில்தான் ஒருகவலை வாட்டி வதைக்கிறது என்றார்
அப்படியா அது என்னக் கவலை என்று அவர் விளம்பினார்
அன்று ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பெண்ண நீங்கள் தொட்டுத் தூக்கி கரைசேர்த்தது தவறு நாம் பெண்களைத் தொடக் கூடாதென சங்கல்ப்பம் செய்திருக்கிறோம் அந்த சங்கல்ப்பத்தை மீறி நீங்கள் நடந்து விட்டீர்கள் என நான் நம்புகிறேன் என்றார்
இவரின் இந்தப் பேச்சைக் கேட்டு அவர் கடகடவென சிரித்து விட்டார் பெண்ணைத் தொடக்கூடாது என்றால் காமத்தோடு தொடக்கூடாது என்பதுதான் விரதமேத்தவிற காப்பாற்றவும் தொடக்கூடாது என்பதல்ல விரதம்

மேலும் நான்அந்தப் பெண்ணை தொட்டுத் தூக்கி எப்போதோ இறக்கிவைத்து விட்டேன் நீங்கள் தான் இரண்டு நாட்களாக சுமந்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றார்
நாமும் அப்படித்தான் இறக்கி வைக்க வேண்டிய சுமைகள் எல்லாவற்றையும் தூக்கி சுமந்து கொண்டு திரிகிறோம் அதனால்தான் இதயப் பாரம் தாங்க மாட்டாமல் வாழ்கை பாதையில் வழிநடக்க முடியாமல் சோர்ந்து போய் தள்ளாடுகிறோம்
இதுதான் நமது துன்பத்தின் மூலக்காரணம் சுத்தமான நம் இதயத்தை தேவையற்ற நினைவுக் குப்பைகளால் நிறைத்து வைத்திருக்கின்றோம் அந்தப்பாரம் அழுத்த அழுத்த ஐயோ துன்பத்தை தாங்க முடியவில்லையே எனக் கதறுகிறோம்
ஆயுதப்பூஜைக்கு தொழிற்கூடங்களை
சுத்தம் செய்வதுபோல் மனதை சுத்தம் செய்ய பழகிக் கொள்ள வேண்டும் சுத்தம்
செய்வதென்றால் அன்பு கருணை போன்றவற்றால் இதயத்தை நிறப்புங்கள் என நான்
உபதேசிக்க விரும்பவில்லை
மறந்து விடுங்கள் உங்களுக்கு ஏற்பட்ட துன்பங்கள் துயரங்கள் ஏமாற்றங்கள் துரோகங்கள் தோல்விகள் என எல்லாவிதமான எதிர்மறைகளையும் மறந்து விடுங்கள்
இறைவன் நமக்கு மறதியை தந்திருப்பது கடன் கொடுத்தவனை உதவி செய்தவனை ஆபத்து நேரங்களில் துணை நின்றவனை மறந்து போவதற்கல்ல நமது கஷ்டங்களையும் மற்றவர்களின் மீதுள்ள பகைமையும் மறப்பதற்குத்தான்
இந்த மறதி என்ற நல்லப் பழக்கத்தை மனிதன் கடைபிடிக்கப் பழகும் போது துன்பத்திலிருந்து மீழ்கிறான் இது அறிவுரையல்ல என் அனுபவம்