Friday, October 7, 2011

ஹரி ஸ்ரீ கணபதியே நமஹ உச்சரிப்புடன் குழந்தைகளுக்கு வித்யாரம்பம்!

நவராத்திரியின் நிறைவு நாளான விஜயதசமியில், குழந்தைகள் நன்கு படித்து கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்ற பக்தியுடன், அந்நாளில் எழுத்தாணிப்பால் எனப்படும் வித்யாரம்பம் செய்யப்படுகிறது. தேன் தடவிய தங்கக் கம்பியை குழந்தையின் நாவில் ஓம் என்று எழுதியபின், மடியில் அமரவைத்து பச்சரிசி பரப்பிய ஒரு தட்டில் குழந்தையின் கையில் ஒரு மஞ்சள் துண்டு கொடுத்து, குழந்தையின் கையைப்பிடித்து ஓம் ஹரி; ஸ்ரீகணபதயே நமஹ என, எழுதி அகர வரிசைசயில் எழுதவும், உச்சரிக்கவும் வைப்பது வித்யாரம்பம்.

No comments:

Post a Comment