Monday, November 21, 2011

தட்கல் புதிய விதிமுறைகள் இன்று அமல்!

சென்னை: ரயில் பயணிகளுக்கான தட்கல் முன்பதிவு முறையில் இன்று முதல் புதிய விதிமுறைகள் நடப்புக்கு வந்து உள்ளன. தட்கல் முன்பதிவில் முறைகேடுகள் நடைபெறுவதாக எழுந்த குற்றச்சாட்டுகளின் பேரில், அதற்கான முன்பதிவுக் காலம் 2 நாட்களில் இருந்து, ஒரு நாளாகக் குறைக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பை, நவம்பர் 11-ஆம் தேதி, ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி வெளியிட்டார்.

புதிய விதிமுறைகள்:

*இனி தட்கல் முறையில் பெறப்படும் டிக்கெட்டுகளை ரத்து செய்துவிட்டு பணத்தைத் திரும்பப் பெற முடியாது.

*ரயில் ரத்து செய்யப்பட்டால் அல்லது மிக காலதாமதாக ரயில் புறப்பட்டால் மட்டுமே, தட்கல் டிக்கெட்டை ரத்து செய்ய முடியும்.

*அடையாள அட்டையைக் காட்டினால் மட்டுமே, தட்கல் டிக்கெட் வழங்கப்படும்

என்பது உள்ளிட்ட விதிமுறைகளை, ரயில்வே நிர்வாகம் கொண்டு வந்துள்ளது. அத்துடன், முகவர்களுக்கான தடை நேரம், ஒரு மணி நேரத்தில் இருந்து தற்போது இரண்டு மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, காலை 8 மணி முதல் 10 மணி வரை, முகவர்களால் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது.

No comments:

Post a Comment