Thursday, August 25, 2011

ஏசுநாதர் கூட கிறிஸ்துவர் அல்ல...!

பாவிகளை மன்னிப்பதுதான் பெரிய கருணை அத்தகைய கருணை மனம் எங்களிடம்தான் உள்ளதென பல கிறிஸ்தவ பாதிரிமார்கள் சொல்லுகிறார்கள்

பாவமன்னிப்பு என்பதை இவர்கள் முழுமையான சரணாகதி என்றும் சொல்வதில்லை அதை நம்புகின்றவர்களும் அந்த அர்தத்தில் எடுத்துக் கொள்வதுமில்லை

பகையாளியின் காதை கடித்து விட்டு ஐய்யோ கடவுளே தப்பு செய்து விட்டேன் மன்னித்து விடு என ஜெபம் செய்தால் எல்லாம் சரியாகிவிடும் என நினைக்கிறார்கள்

இதனால்தான் பல தவறுகள் மீண்டும் மீண்டும் நடக்கிறது

 உண்மையில் எந்தத் தவறு செய்தாலும் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்றே இந்துமதம் செல்கிறது அதற்கு காரணம் உண்டு

உலகில் உள்ள எல்லா மதமும் பாவ புண்ணியத்தைப் பற்றி விரிவாக பேசுகின்றன.  பாவம் செய்யாதே என்று சொல்லாதவர்கள் யாருமே இல்லை.

 கடவுளை வணங்குபவன் முட்டாள்.  கடவுளை கண்டுபிடித்தவன் காட்டுமிராண்டி என சொல்லும் நாத்திகர்கள் கூட பாவம் செய் என சொல்வது இல்லை.

 ஆக உலகில் உள்ள எல்லோருமே பாவத்தை வெறுக்கிறார்கள்.

  ஆனால் அப்படி வெறுப்பவர்களாலேயே தினசரி புதிய பாவங்கள் உற்பத்தியாகி கொண்டே இருக்கிறது.

  தவறு என்று தெரிந்தும் புதிய புதிய பாவங்கள் செய்யப்படுவது ஏன்?

  மனிதன் ஒவ்வொரு செயலிலும் தனது சந்தோஷம் வளர வேண்டுமென ஆசைப்படுகிறான்.

  தனக்கு இன்பம் தராததை செய்வதற்கு அவன் மனம் ஒப்புவது இல்லை.

 துன்பம் இல்லாத வாழ்க்கையை தேடும் போது அதன் குறுக்கே எது வந்தாலும் சரியா தப்பா என சிந்திக்காமல் எல்லாவற்றையும் மோதி  மிதிக்க ஆரமித்து விடுகிறான்.

  நான் சிறிய வயதில் ஒரு பழமொழியை அடிக்கடி கேட்டுருக்கிறேன்.

 பரிசுத்தமுள்ள பூனை பரலோகத்திற்கு போகும் போது கக்கத்தில் கருவாட்டை இடுக்கி கொண்டு போனதாம் என்பது தான் அந்த பழமொழி.


  கருவாட்டை இடுக்கி கொண்ட பூனை போல தான் மனிதர்கள் இருக்கிறார்கள்

  ஒரு கை அரவணைக்க இன்னொரு கை முதுகில் குத்தும் செயல் போன்றது தான்.  வாய் புண்ணியத்தை பேசுவதும் மனம் பாவத்தை செய்வதும்.

  நான் ஒரு தவறு செய்தால் அதற்கான தண்டனையை கால தாமதம் ஆனாலும் கூட அதை நான் தான் அனுபவிக்க வேண்டும். 

தினசரி நான்கு பாக்கெட் சிகரெட் ஊதி தள்ளிவிட்டு நுரையீரல் புற்று நோய் வந்தவுடன் அய்யோ நான் பாவம் செய்து விட்டேன் என்னை யாராவது மன்னியுங்கள் என கேட்பதும் என்னிடத்தில் வா உன்னை மன்னித்து விடுதலை தருகிறேன் என கூறுவதும் வடிகட்டிய கயமை ஆகும்.

  எந்த ஒரு விளைவுக்கும் எதிர் விளைவு உண்டு.  பாவக்காயை பயிரிட்டு விட்டு இளநீரை பெற்று விட முடியாது.


  என் தாகத்திற்கு நான் தான் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது போல் தண்டனையை நான் தான் அனுபவிக்க வேண்டும் அதை யாரும் தடுத்தி நிறுத்தி விட முடியாது.

 கடவுள் கூட பாவத்திற்கு தருவது தண்டனை அல்ல அதை திருத்தி கொள்ள ஒரு வாய்ப்பு.

 அழுக்கான குழந்தையை அழுதாலும் குளிப்பாட்டி சுத்தம் செய்பவள் தான் தாய்.

 புண்ணுக்கு புணுகு பூசுபவள் சரியான தாய் அல்ல.

  கடவுள் தாயினும் சாலப் பரிவுடையவன்.  தங்கத்தை நெருப்பில் புடம் போடுவது போல நம்மை சுத்த ஆத்மாவாக்க பல்வேறு வழிகளை தருகிறான்.

 வழி வலியை தருகிறது என்பதினால் பயணத்தை நிறுத்தி விட யாருக்கும் அதிகராம் இல்லை. 

 ஆனால் இந்த உண்மை கிறிஸ்துவ சமய பாதிரிமார்களுக்கு தெரிவது இல்லை.

 கிறிஸ்துவ சமயத்தாருக்கு மட்டும் உலகில் உள்ள பாவங்களை மன்னிக்கும் அதிகாரத்தை கடவுள் கொடுத்திருப்பது போல பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

  கிறிஸ்துவ சமயத்தை தழுவாதவர்கள் எவருக்கும் தண்டனையிலிருந்து விடுதலை இல்லை என்றும்  பேசி வருகிறார்கள். 

அவர்கள் சொல்வது சரியென்றால் ஏசுநாதர் கூட கிறிஸ்துவர் அல்ல.  அவர் காலத்திற்கு பல நூறு வருஷங்களுக்கு பின்பே கிறிஸ்துவ மதம் தோன்றியது. எனவே அவர் கிறிஸ்தவராக இருக்க வாய்ப்பு இல்லை

 எனவே பாதிரியார்களின் கூற்றுப்படி ஏசுநாதரின் பாவத்திற்கு கூட அவர் விடுதலை பெற முடியாது.

  இந்த கருத்தை அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்றால் தொடர்ந்து பாவ மன்னிப்பு சடங்கை நடத்தட்டும்.

 நமக்கு அதில் அக்கறையில்லை.

No comments:

Post a Comment